இலங்கைக்கு விடுமுறைக்குச் சென்ற பிரஸ்தாப 31 வயது இளைஞனை இரகசிய தகவல்களின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் கடந்த 30 ஆம் திகதி கைது செய்து இருக்கின்றார்கள். ஆனால் இக்கைதை இன்றைய தினமே பொலிசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இவர் மீது தொடர் விசாரணை நடத்த வேண்டி இருக்கின்றது என்றும் இதனால் இவரை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினர். இதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியது எனவும் மேலும் அறியப்படுகிறது.
இந்த இளைஞனிக் கைது குறித்து பொலிசார் தெரிவிக்கையில், இலங்கை மீது அவதூறு ஏற்படுத்த இவர் முனைந்ததாகவும், பொய்யான வீடியோ ஒன்றை சனல் 4 தொலைக்காட்சிக்கு அவர் கொடுத்ததாவும் அவர்மேல் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு விடுமுறைக்கும், உறவினர்களைப் பார்க்கவும் மற்றும் வைபவங்களில் கலந்துகொள்ளச் செல்லும் பல இளைஞர்களையும் யுவதிகளையும் இலங்கை இரகசியப் பொலிசார் கைதுசெய்துவருகின்றமை கண்டிக்கத்தக்க விடையமாகும். ஒரு நபர் இலங்கை செல்லும்போது அவருக்கு பிடிக்காத நபர் ஏதாவது பொய்யான தகவலை இலங்கைப் பொலிசாருக்கு வழங்கினால் அதனையும் ஆதாரமாக வைத்து கைதுசெய்து சிறையில் அடைக்கிறார்கள் இலங்கைப் பொலிசார் எனச் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.
அதிர்வு


No comments:
Post a Comment