
இராமேஸ்வரம் கடற்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி மீன் பிடித்தொழிலில் மீனவரகள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது. படகில் இருந்த வெடிபொருள் தவறுதலாக வெடித்ததில் 3 இந்திய மீனவர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதி கடலில் வெடி வைத்து மீன் பிடிக்க மீனவர்கள் முயன்ற?னுது படகிலிருந்த வெடி பொருள்கள் திடீரென வெடித்ததால், அதில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி அருகே புதுக்குடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் ஒரு படகில் தொண்டி பகுதி கடலில் வெடி வைத்து மீன் பிடிக்க, படகில் வெடிமருந்துப் பொருள்களுடன் சென்றுள்ளனர்.
அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென படகிலிருந்த வெடி பொருள்கள் வெடித்ததால், படகில் பயணம் செய்த 6 பேரில் புதுக்குடியைச் சேர்ந.து கோட்டைராஜா குமாரவேல்é வயது 35, முனியாண்டி ஜெயச்சந்திரன (வயது 17) மற்றும் 15 வயதான கார்மேகம் பதினெட்டாம்படியான் என்ற நாகூர்கனி ஆகிய 3 பேரும் படகிலேயே உடல் சிதறி பரிதாபமான முறையில் உயிரிழந்தனர்.
பொதுவாக மீன் பிடிப்பதில் பாரம்பரியமாக மீன் பிடித் தொழிலைக் கொண்டிருப்பவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. மீன் பிடியை ஒரு தொழிலாக மட்டுமே செய்யும் சில்ர் இம்மாதிரியான வெடிகுண்டு மீன் பிடியை கடைப்பிடிக்கிறார்கள்.


No comments:
Post a Comment