கல்லறைகளில் முகம் இல்லை.பெற்றோர் வைத்த பெயர் இல்லை.
காற்றோடு கலந்திட்ட நாள் இல்லை.
நீ சென்ற திசையில்
கணங்களுக்கும் காலம் இல்லை.
நேரத்திற்கும் காலத்திற்கும்
அப்பால் ஒரு வெளி.
அந்த வெளியை புரிந்து கொள்பவன்
உன்னைப் புரிந்து கொள்வான்.
முக்காலமுமாகி நிற்றல்,
உனக்கு மட்டும் சாத்தியமே.
சுவடுகள் இல்லாத நினைவுகளை மட்டும்
எமக்குச் சொந்தமாக்கி,
மரணத்திலும் வாழும் எம் தேசத்தின் புதல்வர்களே,
எழுதுகோல் நகர மறுக்கிறது.
செந்தமிழும் மௌனித்து விட்டது
உன்னை வணங்குவதற்கு.
இதயச்சந்திரன்


No comments:
Post a Comment