பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் முதல் அமைச்சர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது.இச்சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா,
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது. தமிழக மீனவர்களின் நலன் காக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. கச்சத்தீவில் தமிழர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமையை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும் என்றார்.


No comments:
Post a Comment