விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரும் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வைகோ நேரில் ஆஜராகி வலியுறுத்தினார்.விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரிய வழக்கை விசாரிப்பதற்காக டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பாயம் ஒன்றை நியமித்திருந்தது. அதில் நடைபெற்ற விசாரணையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார். ஆனால், அந்த தீர்ப்பாயம், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்கவேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு தலைமையிலான தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வைகோ மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு 13.06.2011 அன்று விசாரணை பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் வைகோ, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு 13.06.2011 அன்று நேரில் ஆஜராகி, இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். தலைமை நீதிபதி கூறுகையில், முக்கியமான வழக்குகளை விசாரிக்க வேண்டியிருப்பதால், ஆகஸ்டு மாதம் முறையிடலாம் என்று தெரிவித்தார்.


No comments:
Post a Comment