அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:பேரறிஞர் அண்ணாவின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு, 15 ந்தேதி முதல் 17 ந்தேதி வரை 3 நாட்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடை பெறும். அ.தி.மு.க. அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
அ.தி.மு.க. பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், அதில் கலந்து கொள்வோர் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அ.தி. மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆங்காங்கே நடைபெறும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற கேட்டுக் கொள்கிறேன்.
மாவட்ட கழக செயலாளர்களும், நிர்வாகிகளும் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளை எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, அணிகள், அண்ணா தொழிற் சங்கம் உள்ளிட்ட அ.தி.மு.க. அமைப்பு நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகளுடனும் சேர்ந்து அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும்.
தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படாத இடங்களிலும் மற்ற மாநிலங்களிலும் அண்ணா சிலை அல்லது படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment