முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டார்.முதல்வர் ஜெயலலிதா வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்று 108 தொலைபேசிக்கு மிரட்டல் வந்தது. இதையடுத்து முதல்வரின் வீடு முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சோதனை முடிவில் மறைமலை நகரைச்சேர்ந்த பெண் மிரட்டலை விடுத்ததாக தெரியவந்தது.
இதையடுத்து அந்தப்பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டுள்ளனர்.


No comments:
Post a Comment