
அன்னை புபதிக்குப் பின்னர் ஒரு பெண் தனது உயிரை காந்தியின் தேசத்திற்கு காந்தியம் பற்றி போதிக்க தியாகம் செய்துள்ளார். அவரின் தியாகத்தின் முன் நாம் தலைவணங்கி நிற்கிறோம். அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினரின் துயரில் நாடுகடந்த தமிழீழ் அரசின் ஜனாநாயக வாதிகள்ழும் பங்குகொள்கின்றது.
தியாகி திலீபன் உண்ணா நோன்பிருந்து நாவறண்டு, உயிரை ஆகுதியாக்கியபோதும் அதனைக் கண்டும் காணாதிருந்த இதயங்கள். முத்துக்குமாரும் தோழர்களும் தமது உயிரை தீக்குளித்து சாம்பலாக்கியபோதும் உருகாத இதயங்கள் இப்போதா இழகப் போகின்றன.
தமிழ் உணர்வாளர்களால் மேற்கொள்ளப்படும் புனிதமான இத்தகு உயிர்த்தியாகங்கள், தமிழினத்துக்கு எதிராக திட்டமிட்டு நகரும் சக்திகளிடத்தே, எந்த மாறுதல்களையம், தளர்வுகளையும் ஏற்படுத்தாது என்பதைப் புரிந்துகொள்வோம்.
இனஉணர்வும், உறுதியும், தியாக மனப்பான்மையும் கொண்ட செங்கொடி போன்ற அற்புதங்கள், இந்த இனத்திற்கு என்றைக்கும் தேவையானவை. இந்த இனத்தை வாழவைக்கவேண்டியவை. இந்த இனத்திற்கு வழிகாட்ட வேண்டியவை.
தன்னைத்தானே தீமூட்டுவதற்கு முன்னதாக செங்கொடி எழுதிய கடிதத்தில் - தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன் என்று செங்கொடி எழுதி இருந்தார்.
உண்மையில் அவரின் மரணம் அனைவரையும் உலுப்பியுள்ளதுடன் எழுப்பியுமுள்ளது. அவர் மூட்டிய தீ நிச்சயம் கொழுந்து விட்டு எரியும். ஆனால் அந்த தீயில் இன்னொரு செங்கொடி சாம்பலாவதை நாம் விரும்பவில்லை.
அதனை சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரும் விரும்பவில்லை. தாம் விடுதலையாகி வரும்போது –தமக்காகப் போராடியவர்களை தாம் பார்க்கவேண்டும் என்பதே அவர்களின் அவா. அவர்களுக்காகத் தொடர்ந்து போராடுவோம், உயிருள்ளவரை போராடுவோம். உயிர் காக்கப் போராடுவோம்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்


No comments:
Post a Comment