
அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்துக்குப் படையெடுத்திருக்கும் தென்பகுதி சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்துக் காணப்படுகின்றது. இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் புனித பிரதேசமான நயினாதீவுக்குச் செல்லாமல் திரும்புவதில்லை. அந்த வகையில் தற்போது அலை மோதும் சிங்கள மக்களால் நயினாதீவு மூச்சுத் திணறுகிறது.
அந்தளவுக்கு அப் பகுதியில் சிங்கள மக்களின் வருகை பாரியளவு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் நயினாதீவில் வசிக்கும் மக்கள் யாழ்ப்பாணத்துக்கோ அல்லது வேறு இடத்துக்கோ பயணம் செய்வதில் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அத்துடன் நயினாதீவில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களிலிருந்து நயினாதீவுக்கும் அரச பணிக்காகச் செல்வோர் குறிப்பிட்ட நேரத்திற்கு தமது பணிமனையைச் சென்றடைய முடியாதுள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.




No comments:
Post a Comment