
'வீர வணக்கம் வீர வணக்கம்' என்ற கொட்டொலி முழங்க தோழர் செங்கொடியின் இறுதி வணக்க நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.
கட்சிப்பிரதிநிதிகள் இயக்க பிரதிநிதிகள் கலைஞர்கள் தோழர்கள் தொண்டர்கள் என பன்முகதளங்களில் இருந்து பெருந்திரளானவர்கள் பங்கெடுத்திருந்தனர்.
உணர்வெழுர்ச்சியுடன் இடம்பெற்ற இந்த இறுதிவணக்க நிகழ்வரங்கில் தோழர் செங்கொடியின் திருவுருவச்சிலையினை பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் திறந்து வைத்தார்.
ஏழு மணி நேர தொடர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட தோழர் செங்கொடியின் உடலம் அரங்கில் வைக்கப்பட்டது.
பிரதிநிதிகளின் உணர்வெழுர்ச்சி உரைகளைத் தொடர்ந்து தோழா செங்கொடியின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
'எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யறோம். அரசும் போலீசும் நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர, நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல. இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வௌ;வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி அடையாளப் போராட்டமா நடத்தி, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல. இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வௌ;வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி அடையாளப் போராட்டமா நடத்தி, முடிச்சுட்டு போயிடறோம். இதனால யாருக்கு என்ன பயன்? வேற போராட்ட வழிமுறைகளை நாம யோசிச்சா, செயல்படுத்தினா என்ன?'
மரண தண்டனைக்கு எதிராக காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பங்கெடுத்துவிட்டு வீடு திரும்பும் போது தனது சித்தப்பாவிடம் செங்கொடி கேட்ட கேள்வியிது.
செங்கொடியின் கேள்விக்கு பதில் என்ன சொல்வதென்று தெரியாது சித்தப்பா தவித்திருக்க தீக்கு தன்னைக் கொடுப்பதே இதற்கான பதிலாக இருக்குமென தன்னளவில் தீர்மானித்த செங்கொடி....
'தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.
இப்படிக்கு தோழர் செங்கொடி' என ஒப்பமிட்டு மூவா உயிர்காக்க மூண்ட தமிழின உணர்வின் உச்சக்குறியீடாக தன்னை கொடையாக கொடுத்துச் சென்றுள்ளாள்.
சிறுவயது முதலே மக்கள் இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு சமூக விடுதலைக்கும் மக்களின் உரிமைகளுக்குமான போராட்டங்களில் முழக்கமிட்டு சிறைவரைச் சென்ற ஒரு களப்போராளியாகவும் விளங்கியுள்ளார்.
தான் சார்ந்த இருளர் சமூகத்தின் விடிவுக்காக மட்டுமல்லாது அதற்கு அப்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகங்களில் விடிவுக்காக இளம்வயதிலையே துடிப்புடன் மக்களுக்காக முழக்கமிடும் பெண்ணாக இருந்தாள்.
படிப்பாற்றலில் - அறிவாற்றலில் - கலையாற்றலில் என ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக தன்னை முழு அர்பணிப்புடன் ஈடுபாடுகாட்டியவள்.
சேகுவேரா, நெல்சன் மண்டேலா, தந்தை பெரியார், பகத்சிங் ஆகியோரது வரலாறுகளை கற்றுணர்ந்து களப்பணியாற்றியவள்.
குரல்வளமும் பேச்சுவல்லமையும் கொண்ட செங்கொடி பல சமூகவிவதாங்களில் துணிசலுடன் கருத்துரைப்பவள்.
முள்ளிவாய்கால் பொழுத்தில் முத்துக்குமார் மூட்டிய எழுர்ச்சித்தீயை நெஞ்சினில் சுமந்த நின்ற செங்கொடி - தன் நெஞ்சினில் சுமந்த தீயை மூவரின் விடுதலைக்காக உலகத் தமிழர் நெஞ்சங்களில் இறக்கிவைத்துள்ளாள்.









No comments:
Post a Comment