
தேசப்பற்று என்ற போர்வையில் அரசாங்கமும் அமைச்சர்களும் தேசத்தின் சொத்துகளை சூரையாடுகின்றனர் என்று ஐக்கிய தேசிய கட்சித் தலைவரும் எதிரக்;கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எதிர்வரும் ஜுலை 23ஆம் திகதி நடைபெறவுள்ள அக்குறணை பிரதேச சபை தேர்தலை முன்னிட்டு அககுறணை பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியதாவது,
'இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் சிங்கள மன்னர் காலம் தொட்டு வாழ்கின்றனர். அவர்கள் நேற்று வந்தவர்கள் அல்லர். மஹாவம்சத்தில் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்த சமயம் முஸ்லிம்கள்தான் சிங்கள மன்னருக்கு இது பற்றி அறிவித்ததாகக் கூறப்படுகிறது.
அவ்வவாறான முஸ்லிம்களை தற்போதைய அரசாங்கம் விரட்டியடிக்க முயற்சி செய்கின்றது. முஸ்லிம்களைப் பாதுகாத்து அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுத்தது ஐக்கிய தேசிய கட்சியே ஆகும்.
பொதுவாக தேசப் பற்று என்று கூறுவது நாட்டை நேசிப்பதற்கு. ஆனால், அரசாங்கம் தேசப் பற்று என்று கூறுவது நாட்டின் சொத்துகள் சூறையாடுவதையாகும். ஹெஜின் ஒப்பந்தம் மூலம் ஒரு சிலர் பணம் தேடியுள்ளனர். அவர்களுக்கு அந்தப் பணம் 10 தலைமுறைக்குப் போதுமானது. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் மூலம் தேடிய பணம் 25 தலைமுறைக்கு போதுமானது. ஹம்பாந்தோட்டை விளையாட்டு மைதானத்தில் மட்டும் 3000 மில்லியன் ரூபா மோசடி செய்யப்ட்டுள்ளது. கோல்பேஸில் காணி விற்கப்பட்டது. அதை வாங்கிய தனியார் நிறுவனம் பணத்தில் ஒரு பகுதியை மட்டுமே வழங்கியது. இராணுவ தலைமையகத்தை அமைப்பதற்கு காணியை விற்றாலும் தற்போது அதற்குப் பணம் போதாத நிலை ஏற்பட்டுள்ளது. காணியும் இல்லை இராணுவத் தலைமையகமும் இல்லை.
இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம். எத்தனை வாகனங்களுக்கு பெட்ரோலுக்குப் பதிலாக தண்ணீரை ஊற்றியுள்ளனர். அவை அனைத்திலும் ந~;டத்தை பொது மக்கள் செலுத்த வேண்டிவுள்ளது.
இந்நாட்டுக்கு கிரிக்கெட் விளையாட்டை ஜே.ஆர். ஜெயவர்தனவே கொண்டுவந்தார். அவர் மிகவும் சிறந்த முறையில் அதனை முன்னெடுத்து 1996ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்றது. ஆனால் தற்போதைய அரசாங்கம் உலகக் கிண்ணத்தை தவற விட்டாலும் ஹம்பாந்தோட்டை விளையாட்டு மைதானம் மூலம் 3000 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது" என்றும் ரணில் விக்கிரமசிங்க இங்கு தெரிவித்தார்.


No comments:
Post a Comment