
தவறான வழியில் தமிழ் மக்களை வழிநடத்த முற்படுபவர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வரும் அவர் நேற்று வேலணையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ்மக்களுக்காக என்று கூறி அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாவைப் பெற்றுக் கொண்ட சிலர் தமிழ்மக்களைப் பிழையாக வழிநடத்த முற்படுவதாகவும் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களின் பிரச்சினைகளை தன்னிடம் முன்கதவு வழியாக கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ் மக்களின் பெயரைக் கூறி சிலர் பின்கதவு வழியாக வந்து கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவர்கள் கேட்பதைத் தான் ஒருபோதும் வழங்கத் தயாராக இல்லை என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
வடக்கில் என்ன செய்ய வேண்டும் என்பது தமக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment