
ஜெயலலிதாவின் பிரதிபலிப்பை செவ்வியாக எடுத்து வெளியிடவும் அந்தத் தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.புதுடெல்லியைத் தளமாகக் கொண்ட தனியார் தொலைக்காட்சி நிலையம் ஒன்று ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை இந்த வாரம் ஒளிபரப்பவுள்ளது.
இதற்கான ஒளிபரப்பு உரிமத்தை அந்தத் தொலைக்காட்சி சனல் 4 தொலைக்காட்சியிடம் இருந்து பெற்றுள்ளது.
எதிர்வரும் வியாழன் இரவு 10 மணிக்கும், வெள்ளி இரவு 11 மணிக்கும், சனி இரவு 10 மணிக்கும் இந்த ஆவணப்படம் இந்தியாவில் ஒளிபரப்பாகவுள்ளது.
இதன்பின்னர் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் பிரதிபலிப்பை செவ்வியாக எடுத்து வெளியிடவும் அந்தத் தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை ஒளிபரப்பவுள்ள தொலைக்காட்சி நிறுவனம் இதுபற்றிய விளம்பரப் பலகைகளை சென்னை நகரில் பெருமளவில் காட்சிப்படுத்தவும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இந்தப் பரப்புரைகளைச் செய்வதற்கு தொலைக்காட்சி நிறுவனம் குழுவொன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


No comments:
Post a Comment