ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதாகி பின்னர் குற்றங்கள் நிரூபிக்கப்படமாலே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் தூக்குத் தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் அவர்களுக்கு வழங்கப்படவிருந்த தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. இதனை பெரும் கஷ்டத்துக்கு மத்தியில் அண்ணன் வைகோ அவர்கள் மேற்கொண்டிருந்தார். இதற்காக டெல்லியில் இருந்து இந்தியாவின் தலைசிறந்த கிரிமினல் வழக்கறிஞர் ஜெத்மலானி சென்னை வந்துசென்றார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரிக்கப்படக் கூடாது என்றும் அப்படி அது விசாரிக்கப்பட்டார் பாரபட்சம் காட்டப்படும் என்றும் காங்கிரஸைச் சேர்ந்த வெங்கட் என்பவர் டெல்லி உச்ச நீதிமன்றில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை ரத்து செய்யக் கோரி ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை வந்தபோது உயர்நீதிமன்ற வளாகத்தில் பெரும் கூட்டம் கூடியது. இதனால் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. எனவே வழக்கு விசாரணையை சென்னையில் தொடர்நதால் அது தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். மேலும் தூக்குத் தண்டனை குறித்த ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த வழக்கையும் உச்சநீதிமன்றத்துக்கே மாற்றி விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை ஏற்று சிங்க்வி தலைமையிலான 2 நீதிபதிகள் கொண்ட குழு இந்த வழக்கை விசாரித்தது. பின்னர் விளக்கம் கேட்டு மூன்று பேருக்கும் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரணைக்கு வந்தது. சிங்க்வி விடுமுறையில் இருப்பதால் 3 பேர் கொண்ட வேறு குழு முன்பு வழக்கு வந்தது. இதையடுத்து பேரறிவாளன், முருகன், சாந்தன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வாதிடுகையில், இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை முடிந்து விட்டது. நீதிபதி சிங்க்வி தற்போது விடுமுறையில் உள்ளார். அவர் வந்த பிறகுதான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். இந்த குழு விசாரிக்கக் கூடாது. தவறான குழு முன்பு இந்த வழக்கு இன்று வந்துள்ளது என்று கூறினார். இதை 3 நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டனர். நீதிபதி சிங்க்வி வந்த பின்னர் அந்த குழுவுக்கு இந்த வழக்கு மாற்றப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
பின்னர் ராம்ஜேத்மலானியுடன், இந்த வழக்குக்காக புதுடெல்லி சென்றிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியில் வந்தார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராம்ஜேத்மலானி அவர்களின் வாதத் திறமையால் மூன்று பேரின் தூக்குக் கயிறும் அறுபடும். அதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. மூன்று பேரின் தூக்குத் தண்டனையும் முறியடிக்கப்படும் என்றார்.
இருப்பினும் இவர்கள் மூவரையும் தூக்கில் போடுமவரை தாம் ஓயப்போவது இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வெங்கட்டுக்கு அப்படி என்ன கொலைவெறி என்று கேட்க்கிறீர்களா? இல்லை அவருக்கு பின்னால் யார் நின்று தூண்டிவிடுகிறார்கள் என்று பார்க்கிறீர்களா? எல்லாமே காங்கிரஸ் கட்சியினர் தான் இதற்கு காரணம்.


No comments:
Post a Comment