ரஜினியின் பில்லா பட ரீமேக் செய்து மாபெரும் வெற்றி கண்ட அஜித் அதன் பாகம் -2 இல் தற்போது முழுமூச்சாக ஈடுபட்டுவருகிறார். இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்குகிறார்.
கடந்த சில நாட்களாக படத்தின் சண்டை காட்சிகளை கோவாவில் படம்பிடித்து வருகின்றனர் பில்லா - 2 படக்குழுவினர். இந்த படப்பிடிப்பின் பேர்து அஜித்துக்கு அடிபட்டு கை கிழிந்து ரத்தம் வழிந்திருக்கிறது.
தண்ணீர் போத்தல் ஒன்றால் எதிரியின் தலையில் அடிப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் போலியான போத்தலே பயன்படுத்தியிருக்கின்றனர். இருப்பின் அடிக்கும் போது தவறினால் கையை கிழிக்கும் அபாயம் இருந்தது.
பக்குவமாகவே இந்த காட்சியை அணுகியுள்ளார் தல எதிர்பாராத விதமாக போத்தல் உடைந்து கைகளை கிழித்துவிட்டாதாம்.
இதனை பார்த்த படக்குழுவினர் பதறியுள்ளனர். இதில் படக்குழுவினரை விட அதிகமாகவே பயந்துள்ளளார் நாயகி பார்வதி ஓமணக்குட்டன். இதனை தனது குடும்பத்துக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார் தல ஆனால் இப்போது விடயம் காட்டுத் தீயா பரவிடுச்சே...! _


No comments:
Post a Comment