சென்னை உள்பட 10 மாநகராட்சியில் அ.தி.மு.க மேயர் வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர்.சென்னை மாநகராட்சி அ.தி.மு.க மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி 1,78,521 வாக்குகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியன் 1,04,600 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார்.
கோவை மாநகராட்சி அ.தி.மு.க மேயர் வேட்பாளர் செ.ம.வேலுச்சாமி 51,752 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.
தி.மு.க. வேட்பாளர் 31,703 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் இருக்கிறார்.
மதுரை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் ராஜன் செல்லப்பா 99,056 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பாக்கியநாதன் 49,524 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார்.
திருச்சி மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் சவுண்டப்பன் 54,458 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
தி.மு.க. வேட்பாளர் 27,290 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் 40,076 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் 16,444 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார்.
ஈரோடு மாநகராட்சி அதிமுக வேட்பாளர் 28,429 வாக்குகள் பெற்று முதலிடத்திலும், தி.மு.க. வேட்பாளர் 13,904 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் இருக்கிறார்.
சேலம் மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் 27,555 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் 15,219 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார்.
நெல்லை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் விஜிலா 18,952 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் அமுதா 12,716 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார்.
வேலூர் மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் 31,924 வாக்குகள் பெற்று முதலிடத்திலும், தி.மு.க. வேட்பாளர் 27,415 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் சசிகலா 59,479 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் 38,614 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார்.


No comments:
Post a Comment