
ஆயிரம் படங்களில் நடித்து, தமிழக மக்களை சிரிக்க வைத்த நடிகர் லூஸ் மோகன் பரிதாப நிலையில் உள்ளார். அவர், தனது மகன் மீது போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன். ஆயிரத்துக்கும் அதிகமான படங்களில் நடித்து மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர். தற்போது லூஸ் மோகனுக்கு 84 வயது ஆகிறது. சென்னை மயிலாப்பூர் சாலை தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். தேவையான அளவு பணம் இருந்தும் தனக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்பதுதான் லூஸ் மோகனின் குறை.
இதற்காகத்தான் அவர் போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். தன்னை தனியாக தவிக்க விட்டுச் சென்ற தன் மகன் மீதும், மருமகள் மீதும் குற்றம்சாட்டி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுவில் கூறியுள்ளார். மனுவை கொடுத்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த லூஸ் மோகன், தனக்கே உரிய கலகலப்புடன் கவலைகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், மக்களை சிரிக்க வைத்த எனது நிலை, இன்று பலரும் சிரிக்கும்படி ஆகிவிட்டது. எனக்கு தேவையான அளவு பணம் இருக்கிறது. ஆனால் உதவிக்கு ஆள் இல்லை. எனது மனைவி பச்சையம்மாள் இறந்தபிறகுதான் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டு விட்டது. தாய்க்குப்பின் தாரம் என்பார்கள். எனது மனைவியால்தான் இந்த சொந்தவீட்டில் வாழும் அளவுக்கு நான் வசதியாக உள்ளேன். எனக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் நல்லபடியாக திருமணம் செய்து வைத்துவிட்டேன். மகன் கார்த்திக் என்னை நன்றாக பார்த்துக் கொள்வான் என்று நினைத்தேன். அவனுக்கு கம்ப்யூட்டர் சென்டர் வைத்து கொடுத்தேன். அதை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை. அதன்பிறகு தமிழ் பத்திரிகை ஒன்றில் வேலை வாங்கி கொடுத்தேன். இப்போது அங்குதான் வேலைபார்க்கிறான்.


No comments:
Post a Comment