லிபியா மீதான முதலாவது குண்டை வீசியது பிரான்சிய விமானங்களே, அதை முடித்து வைத்ததும் பிரான்சிய குண்டு வீச்சு விமானங்களே. அனைத்து நாடுகளின் தாக்குதல்களையும் தலைமைக் கட்டுப்பாட்டில் நெறிப்படுத்தியதும் பிரான்சே என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது லிபியாவின் மேலதிக அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரம் பூரணமாக வந்துள்ளதால் போர் ஓய்வடைந்துள்ளது.
ஆகவே விமானத் தாக்குதல்களுக்கான தேவைகள் முடிவடைந்துள்ளன. மேலும் விமானத் தாக்குதல்களை நேட்டோ பெரும் செலவிலேயே நடாத்திய காரணத்தால் தொடர்ந்தும் செலவை நீட்டிக்க விரும்பாது என்பதும் தெரிந்ததே. டென்மார்க்கிற்கு மட்டும் 400 மில்லியன் குறோணர்கள் இந்தத் தாக்குதலில் செலவு ஏற்பட்டுள்ளது. இந்தச் செலவுகளை எப்படி மீளப்பெறுவது என்பது கேள்விக்குறியாகும். ஆனால் லிபியாவில் ஜனநாயகம் மலர வேண்டும் என்று நேட்டோ செயலர் ஆனஸ்போ ராஸ்முசன் நேற்றே தெரிவித்துவிட்டார். அதேபோல டென்மார்க் விமானங்களும் நாடு திரும்பவுள்ளன.
தொடர்ந்தும் கடாபியின் எஞ்சிய படைகள் தாக்குதல்களை நடாத்துகிறதா என்பதை அவதானிக்க சிறியளவில் நேட்டோலின் விமானங்கள் தரித்திருக்கலாம் என்று ஐரோப்பிய பாராளுமன்ற நிருபர் தெரிவிக்கிறார்.


No comments:
Post a Comment