அண்மையில் லிபிய புரட்சி படையினரால் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் ஜனாதிபதி கடாபிக்கு சர்வதேச ரீதியாக சுமார் 200 பில்லியன் டொலர்கள் அளவிற்கு வங்கி கணக்கு, ரியல் எஸ்டேட், முதலீடு உள்ளிட்டவைகள் இருந்தமை தெரிய வந்துள்ளது.
இதனால் மேற்கத்திய நாடுகள் கடாபியின் சொத்துக்கள் மட்டுமின்றி லிபியாவில் உள்ள முதலீடுகளை கைப்பற்றவும் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலும் கடாபிக்கு 37 பில்லியன் டொலர்கள் மதிப்பில் முதலீடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
அதேவேளை, பிரான்ஸ், லண்டன், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலும் 30 பில்லியன் டொலர்களுக்கு அதிகமாக கடாபியின் சொத்துக்களை அந்த நாட்டு அரசுகள் கைப்பற்றி உள்ளதாகவும் அந்த நாளிதல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment