
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டை இடித்து அந்த இடத்தில் ஒரு வீடு இருந்ததற்கான அடையாளமே தெரியாது அழித்தவர்கள் அந்த வீடு இருந்த இடத்தில் உள்ள மண்ணை என்னசெய்யப் போகிறார்கள்? என்று வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.வீட்டை இடித்து அழித்து நினைவுச் சின்னங்களை அகற்றுகின்ற ஈனச் செயல்கள் இன நல்லிணக்கத்துக்கு ஒரு போதும் உதவாது. இத்தகைய செயல்கள் தமிழ் மக்கள் மனதில் என்றுமே ஆறாத காயங்களையே ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீடு படையினரைக் குவித்து, பெக்கோ பாரந்தூக்கிகள் மூலம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முற்றாக அகற்றப்பட்டுள்ளது.
கட்டடச் சிதைவுகளை டிப்பர் வாகனங்கள் மூலம் அள்ளி சென்றனர். இது எங்கே கொண்டுசெல்லப்பட்டது என்பது தெரியவில்லை.
இப்படியான நடவடிக்கைகள் தேசிய நல்லினக்கத்துக்கு ஒரு போதும் உதவாது. தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத காயமே இத்தகைய செயல்கள் மூலம் ஏற்படும்.
மீண்டும் இனங்களும் ஒட்ட முடியாது நிலைமையை நோக்கி அரசு சென்று கொண்டிருக்கின்றது'' என்றார் சிவாஜிலிங்கம்.
வீட்டின் சிதைவுகளை எடுத்துச் சென்றவர்கள் அங்கு இருக்கும் எம் வல்வெட்டித்துறை மண்ணை என்னசெய்யப் போகிறார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


No comments:
Post a Comment