இலங்கையில் கடந்த 1 1/2 ஆண்டுகளில் 1.75 லட்சம் தமிழகர்கள் கொல்லப்பட்டனர். ராஜபக்சே போர் குற்றவாளி என்று உலக நாடுகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்றியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மத்திய அரசு தமிழகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இம்மூவரின் மரண தண்டனையை மட்டுமல்லாது உலகம் முழுவதும் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மரணம் என்பது தண்டனை அல்ல. அது ஒரு முடிவு.
தண்டனை என்பது திருந்தி மீண்டும் வாழ்வதற்கு வாய்ப்பு அளிப்பதுதான். 20 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும். தமிழக அமைச்சரவையை கூட்டி 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் கடிதம் அனுப்ப வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.


No comments:
Post a Comment