
முருகன், சாந்தன், பேரறிவாளன் 3 பேருக்கு தூக்கு தண்டனை 9-ந் தேதி நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வேலூர் ஜெயில் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காமாண்டோ படை வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திரபாபு, டி.ஐ.ஜி. சேஷசாயி போலீஸ் சூப்பிரண்டு பாபு ஆகியோர் ஜெயிலுக்கு சென்றனர்.
ஐ.ஜி.சைலேந்திர பாபு தூக்கு மேடையை பார்வையிட்டார். மேலும் ஜெயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து ஜெயில் வளாகத்தில் நவீன துப்பாக்கிகள் ஏந்திய கமாண்டோ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர அதிரடிபடை போலீசார் மற்றும் லோக்கல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜெயில் வளாகத்துக்குள் வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஜெயில் முன்பகுதி கேட் மூடப்பட்டுள்ளது. ஜெயிலுக்கு வருபவர்கள் யார் என்ற விவரம் பதிவு செய்யப்படுகிறது. அவர்களது உடமைகள் பலத்த சோதனை செய்யப்படுகிறது. மேலும் அவர்களை வீடியோ காமிரா மூலம் பதிவு செய்த பின்னர் ஜெயில் வளாகத்துக்குள் அனுமதிக்கின்றனர்.
வேலூர் ஜெயிலில் இருந்து சுமார் 200அடி தூரத்தில் சாலையின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை செய்து வருகின்றனர்.
இது தவிர வேலூர் நகர் பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து 300 போலீசார் வேலூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பஸ் நிலையங்கள் வழிபாட்டு தலங்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


No comments:
Post a Comment