
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் படையினர் வீடு வீடாகச் சென்று சோதனை செய்து வீட்டாரின் பெயர் விவரங்களைப் பதிவு செய்தனர் என்று கிராமத்தவர்கள் தெரிவித்தனர். நேற்றைதினம் 6 பேர் கொண்ட படையினர் வீடுகளுக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டதுடன் கிறிஸ் பூதங்கள் பற்றியும் விசாரித்ததாகப் பொதுமக்கள் கூறினர்.
இராணுவத்தினரின் இவ்வாறான திடீர் சோதனை மற்றும் நடத்தைகள் காரணமாக விதவைகள், ஆண் துணைகளைப் பிரிந்திருக்கும் பெண்கள், பெண்பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் மிகுந்த அச்சப் பீதியுடன் உள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் அவர்கள் இரவு நேரங்களில் தத்தமது வீடுகளில் நிம்மதியாக இருக்கமுடியாத நிலையில் சிறு குழுவாகச் சேர்ந்து இரவைக் கழிப்பதாக தெரிவிக்கின்றனர்.
ஓரிரு வாரங்களில் பாடசாலை ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் தமது பிள்ளைகளை எவ்வாறு பாதுகாப்பாக பாடசாலைக்கு அனுப்புவது என்பது குறித்தும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.பெரும் கஷ்டங்களை அனுபவித்து தமது சொந்த இடங்களில் குடியேறிய மக்கள் மெல்ல மெல்ல சுமுகவாழ்வுக்கு மாறி வரும் சந்தர்ப்பத்தில் கிறிஸ் பூதம் என்ற பெயரில் மீண்டும் இராணுவத்தின் தேடுதல், சோதனைகளால் அவர்கள் செய்வதறியாது உள்ளனர் என்று கிராமவாசி ஒருவர் தெரிவித்தார்.


No comments:
Post a Comment