
மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் சிறிலங்காப் படையினர் இன்று அதிகாலை தொடக்கம் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிய தேடுதல் இன்னமும் தொடர்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
களுதாவளையின் சில பகுதிகள், வன்னியர் வீதி, தேவாலய வீதி ஆகிய பகுதிகளே சிறிலங்காப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு வீடு வீடாகத் தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பெருந்தொகைப் படையினர் குவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் இந்தத் தேடுதலுக்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
வன்முறைகள் தொடர்ந்தால், கிழக்கில் மீண்டும் வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்துவோம் என்றும், சோதனைச்சாவடிகளை அமைத்து வீதிகளில் நிறுத்துவோம் என்றும் கிழக்குப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment