தமிழக தமிழர்கள் மட்டுமல்ல உலகத்தில் பல நாடுகளில் வாழும் தமிழர்களின் பார்வையும் வேலூர் மத்திய சிறையை நோக்கியே உள்ளது.21 ஆண்டுகள் சிறை வாழ்க்கை. 11 ஆண்டுகளாக ஜனாதிபதியின் கருணைப் பார்வையை நோக்கி காத்திருந்தது ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்கள்.
கடந்த 11-ந் தேதி கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள தாக வெளியான தகவல் தமிழர்களின் நெஞ்சில் தீயாய் சுட்டது. அன்று முதல் இன்றைய நிமிடம்வரை கருணை மனு நிராகரிப்பை கண்டித்து பலப்பல போராட்டங்களை உணர்வாளர்கள் நடத்தி வருகின்றனர்.
அதோடு இந்தக் கொடூரத் தகவலை சிறையில் வாடும் மூவரும் எப்படி எடுத்துக்கொண்டுள் ளார்களோ என தமிழு ணர்வாளர்கள் கவலைப் பட்டுக்கொண்டுள்ள நிலையில் சிறையில் உள்ள அவர்கள் எப்படி உள்ளார்கள், தற்போதைய நிலை பற்றி என்ன நினைக்கிறார்கள் என அறிய முற்பட்டோம். குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தின் ஒருங்கிணைப் பாளர் வழக்கறிஞர் வினாயகம் மூலம் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரிடம் நக்கீரனுக் காக பேசிவிட்டு வாருங்கள் என சில கேள்விகளை தந்து அனுப்பினோம். அவரும் கடந்த 18-ந் தேதி மதியம் 3:40 மணியளவில் சிறைக்குள் சென்றவர் 5:00-மணிக்கு வெளியே வந்தார். உடனே, நம்மிடம் உங்களது கேள்விகளை மூன்று பேரிடமும் கூறி கேட்டேன். அவர்கள் கூறிய பதில்கள் இதோ என நம்மிடம் தெரிவித்தார்.
நக்கீரன்: தூக்குத் தண்டனையை குறைக்கக் கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியிருந்தீர்கள். 11 ஆண்டுகள் பொறுத்து அதை ஜனாதிபதி நிராகரித்து உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவல் உங்களுக்கு முறைப்படி தெரியுமா? நிராகரிப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
முருகன்: இன்னும் முறைப்படி எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. நிராகரிப்பு என்பது ஜனாதிபதியின் விருப்பம். அவர் முடிவை எடுத்து அறிவித்துள்ளார். இனி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை...
மேலும் வாசிக்க...


No comments:
Post a Comment