
அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளமையால் இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை இயல்பாகவே இல்லாது போகும். அத்துடன், அதியுயர் பாதுகாப்பு வலயங்களையும் வைத்திருக்கமுடியாது என்று பொது உரிமை இயக்கத்தின் பணிப்பாளர் சாலிய எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.அவசரகால சட்டத்தின் கீழேயே தமிழீழ விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்டனர். அத்துடன் அதியுயர் பாதுகாப்பு வலயங்களும் ஏற்படுத்தப்பட்டன.
எனினும் பொதுமக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளின்படி, படையினருக்கு தடுத்து வைக்கும் அதிகாரம் உள்ளதாக எதிரிசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments:
Post a Comment