
நியுசிலாந்து நாடாளுமன்றத்தில் சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது.
நியுசிலாந்து பிரதமர் ஊடக சந்திப்புகளுக்கு வழங்கமாகப் பயன்படுத்தும் அறையிலேயே இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது.
கடந்த 16ம் நாள் இந்த ஆவணப்படத்தை நியுசிலாந்தின் கிறீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீத் லொக்கி, தொழிலாளர் கட்சி உறுப்பினர் மாயன் ஸ்ட்ரீட், தேசியக் கட்சி உறுப்பினர் ஜக்கி புளூ ஆகியோரே இந்த ஆவணப்படத்தை திரையிட்டுள்ளனர்.
மனா கட்சித் தலைவர் ஹோன் ஹரவிரா, கிறீன் கட்சியின் இணைத்தலைவர் ருசெல் நோமன் ஆகியோர் உள்ளிட்ட நான்கு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் இந்த ஆவணப்படத்தை பார்வையிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆவணப்படத்தின் கொடூரமான காட்சிகளைப் பார்வையிட்ட பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியில் அமைதியாக வெளியேறியதாக கிறீன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கீத் லொக்கி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த ஆவணப்படம் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நியுசிலாந்து நாடாளுமன்றத்தில் இந்த ஆவணப்படத்தை திரையிட விடாமல் தடுக்க சிறிலங்கா தூதுவர் தமது ஆதரவாளர்கள் சிலருடன் இணைந்து எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவும் கீத் லொக்கி குறிப்பிட்டுள்ளார்.


No comments:
Post a Comment