இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
வாழைச்சேனை, பேச்சியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் திருமதி. எஸ்.மோகன் அவர்கள் நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் தனது கணவனுக்கு மதிய உணவு கொண்டுசென்ற வேளை துவிச்சக்கரவண்டியில் வந்த ஒருவர் திடீரென இவரது கூந்தலைப் பிடித்து முகத்தில் அடித்ததுடன் நெஞ்சுப் பகுதியில் தமது கையில் இருந்த ஒரு கூரான கத்தியால் கீறியுள்ளார்.
இவர் ஓலமிட அவர் அங்கிருந்து தம்பிவிட்டார். இதனால் வாழைச்சேனை பகுதி சிறு பதற்றநிலையில் உள்ளது. வாழைச்சேனை வைத்தியசாலைக்கு சென்ற இப் பெண்மணி வைத்தியசாலையில் தங்குவதற்கு மறுத்துள்ளார்.
இதற்கு காரணம் இவ்வாறு பாதிக்கப்பட்டு வைத்தியசாலைக்கு செல்பவர்களை வைத்தியர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவராக பதிவதே காரணமாகும்.
இன்று ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுக்குள்ளான பெண்ணை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவரது வீட்டுக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
இதேவேளை ஈன்று பிற்பகல் வேளையில் செங்கலடி பதுளை வீதியில் செல்வி. எஸ். றிசாந்தினி என்னும் பெண் வீட்டில் இருந்த வேளை திடீரென பிரவேசித்த மர்ம மனிதன் இப்பிள்ளையை தாக்கி இவரது கையிலும், நெஞ்சிலும் தனது விரலுடன் இணைக்கப்பட்ட கூரான ஆயுதத்தால் கீறியுள்ளார்.
இவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா இருவரும் வைத்தியசாலைக்கு சென்று பாதிக்கப்பட்ட பிள்ளையை பார்வையிட்டதுடன், மேலதிக நடவடிக்கையையும் மேற்கொண்டனர்.
இவ்வேளை செங்கலடி பகுதியில் மர்ம மனிதன் என ஒருவர் பொது மக்களால் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டவேளை அங்கு மோட்டார் வாகனத்தில் வருகை தந்த இராணுவத்தினர் பொது மக்களை பலவாறு தாக்கியுள்ளனர்.
இந்நிலையை கேள்வியுற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா ஆகியோர் மாவட்ட இராணுவ பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு மக்களைத் தாக்கும் நடவடிக்கையை உடன் நிறுத்தியுள்ளனர்.


No comments:
Post a Comment