போரில் நடுநிலையாளராக செயற்பட்ட எரிக் சோல்கெய்ம் இப்படியொரு நிகழ்வு அரங்கேறியபோது என்ன செய்தார்..? இது போர்க்குற்றம் என்ற செய்தியை இதுவரை சோல்கெய்ம் ஏன் ஐ.நாவில் பதிவு செய்வில்லை..? இப்படிப்பட்ட ஒருவர் ஏன் நடுநிலையாளராக பணியாற்றினார்..? என்பன போன்ற தார்மீகக் கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.
சிறீலங்கா அரசின் வெளிநாட்டு பிரிவு இந்தக் காணொளியைப் பார்த்து, இப்போது தாம் பாரிய அதிர்ச்சியடைந்துள்ளதாக நாடகமாடியுள்ளது. இந்த நாடகத்தில் சர்வதேச சமுதாயம் ஏமார்ந்துவிடக் கூடாது. நோர்வேஜிய மக்கள் இந்தக் காணொளியை பார்த்துள்ளார்கள். சோல்கெய்ம் மீது அவர்களுடைய கேள்விகள் விழுவதற்கு வாய்ப்புள்ளன.
விடுதலைப் புலிகள் நோர்வேயை முழுமையாக நம்பினார்கள். சர்வதேச சமுதாயத்தை நம்பினார்கள். ஆனால் எல்லாமே பகல் கனவாகிவிட்டது. பயங்கரவாத பட்டம் கட்டிய ஐரோப்பிய ஒன்றியம் இந்த ஒளிநாடாவுக்கு என்ன பதில் கூறப்போகிறது. ருவாண்டா இனப்படுகொலையில் இடம் பெற்றதைவிட பாரிய தவறுகள் செய்யப்பட்டுள்ளதை நிகழ்வுகள் காட்டுகின்றன. நோர்வேக்கு இந்த விடயத்தில் மாபெரும் தார்மீகக் கடமை உண்டு. இப்போதாவது சோல்கெய்ம் விரைந்து செயற்பட்டு நோர்வேயின் நம்பகத் தன்மையை உலக அரங்கின் முன் காட்ட வேண்டிய நேரம் வந்துள்ளது.


No comments:
Post a Comment