மத்தியகிழக்கின் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் ஸ்திரமற்றத் தன்மை காரணமாக தமிழகத்தில் மாம்பழம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக தமிழக விவசாயிகள் சங்கம் கூறுகிறது.
இந்தியாவிலேயேஅதிகப்படியான மாம்பழக் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் மையங்களான கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி போன்ற பகுதிகளில் இதன் காரணமாக சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலர் ராம கவுண்டன் தமிழோசையிடம் தெரிவித்தார்.மத்திய கிழக்கிலுள்ள நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதி விவசாகிகளிடம் மாம்பழக் கூழுக்கு ஆர்டர் கொடுப்பார்கள். இருபது சதவீதம் வரை முன்பணமாகத் தந்து இவர்கள் ஆர்டர் கொடுப்பார்கள். மீதி முதலீட்டுக்கு வங்கிக் கடன்களை வாங்கி விவசாயிகள் தொழில் செய்வார்கள் என்றும் ராம கவுண்டன் விளக்கினார்.
இந்த ஆண்டு முன்பணம் கொடுத்த யாரும் சரக்குகளை மீதிப் பணம் கொடுத்து எடுக்க முன்வராததால், வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் கூறுகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 56 மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகள உள்ளதாகவும், அவை ஆண்டு தோறும் 500 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்யும் எனவும், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக தொழில் நொடித்து போகும் நிலை ஏற்படக்கூடும் என்கிறஅச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
அரசியல் நெருக்கடி நிலவும் சூழலில் மாம்பழக் கூழை பிரச்சினை இல்லாமல் இறக்குமதி செய்ய முடியுமா என்றும் இறக்குமதி செய்தவற்றை விற்க முடியுமா என்றும் அஞ்சி ஆர்டர் கொடுத்தவர்கள் சரக்கை எடுக்க முன்வராததன் காரணம் என்று அவர் கூறினார்.
தமிழகத்தின் தொழிற்சாலைகளில் தயாராகவுள்ள மாம்பழக் கூழை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவோ அல்லது, பிரச்சினைகளில் சிக்கியுள்ள அரசுகளிடம் பேசி ஏற்றுமதிகளுக்கு வழிசெய்து பிரச்சினைகளை தீர்க்கவோ அரச தரப்பில் போதிய ஆதரவு இல்லை எனவும, இது விவாசயிகளை மிகவும் கலக்கமடையச் செய்துள்ளது எனவும் தமிழநாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலர் சுட்டிக்காட்டுகிறார்.


No comments:
Post a Comment