போலீசார் நடவடிக்கை எடுத்து பல கோடி சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் திருப்பி வழங்கி வருகிறார்கள்.
நடிகரும், ராமநாதபுரம் தி.மு.க. எம்.பி. யுமான ஜே.கே.ரித்தீஷ் குமார் நில அபகரிப்பு புகாரில் சிக்கியுள்ளார். இவர் மீது காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பாப்பான் குடியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவர் காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு மனோகரனிடம் நில அபகரிப்பு புகார் கொடுத்தார்.
அதில், ‘’எனக்கு சொந்தமான 90 சென்ட் (சுமார் 1 ஏக்கர்) நிலம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ளது. நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் ஆகும். இந்த நிலத்தை தி.மு.க. எம்.பி. ரித்தீஷ்குமார் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துக் கொண்டார். எனவே இதில் நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்’’என்று கூறியிருந்தார்.
மனுவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் உள்ள நில அபகரிப்பு பிரிவுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
கூடுதல் சூப்பிரண்டு பாஸ்கர் தலைமையிலான போலீசார் இது பற்றி விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு காஞ்சீபுரம் போலீசார் சென்னை வந்தனர்.
மயிலாப்பூர் ரங்கா தெருவில் ரித்தீஷ் எம்.பி. வீட்டுக்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த அவரை கைது செய்தனர். உடனே போலீஸ் வேனில் ஏற்றி காஞ்சீபுரம் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
ரித்தீஷ் எம்.பி. மீது மோசடி, ஏமாற்றுதல், மிரட்டுதல், போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபடுதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ்வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ரித்தீஷ் எம்.பி. கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் நகர தி.மு.க. செயலாளர் சேகர், மாவட்ட நிர்வாகிகள் பொன்மொழி, ஆறுமுகம், முன்னாள் சேர்மன் பி.எம். குமார் உள்பட தி.மு.க.வினர் பலர் காஞ்சீபுரம் போலீஸ் நிலையம் முன் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


No comments:
Post a Comment