நெல்லை மாவட்டம் கடையநல்லூர் யூனியன் நெடுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் மக்கள் நலப்பணியாளர் முத்தையாசாமி. இவருக்கு வயது 46. அவர் அந்த யூனியனின் நெடுவயல் ஊராட்சியின் மக்கள் நலப்பணியாளராக ஆரம்பத்திலிருந்தே பணிபுரிந்து வருபவர்.இதனிடையே தமிழக அரசு திடீரென 13,500 மக்கள் நலப்பணியாளர்களைப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்ட செய்தியை அறிந்ததிலிருந்து வேலை போய் விட்டதே என்ற அதிர்ச்சியில் மன உளைச்சலுக்கு ஆளானார்.
கடந்த ஒருவாரமாக மன அழுத்தம், பரிதவிப்பால் உழண்ட முத்தையாசாமி திடீரென மாரடைப்பால் இறந்து போனார்.
வேலை பறிபோயிறுச்சி. இனிமே குடும்பத்த எப்படிக் காப்பாத்தப் போறேன்னு தவிப்பிலேயும், மனவாட்டத்திலயும் இருந்த எங்கப்பாவுக்கு திடீர்னு நெஞ்சுவலி வந்திருச்சு. கடையநல்லூர் தனியார் ஆஸ்பத்திரியில சிகிச்சைக்குக் கொண்டு போனோம். வைத்தியம் பண்ணியும் பிரயோசனமில்ல. எங்கப்பா உயிர் போயிடுச்சே. இனிமே நாங்க என்ன பண்ணுவோம் புரியலியே. கண்ணீர் வழியசொன்னார் மகள் பாலசண்முகத்தாய்.
முத்தையாசாமிக்கு ஆனந்தி என்கிற நோய் வாய்ப்பட்ட மனைவியும் உள்ளார். முத்தையாசாமி குடும்பத்தினருக்கு தென்காசி பகுதி மக்கள் நலப்பணியாளர்கள் ஆறுதல் கூறினர்.






No comments:
Post a Comment