Wednesday 16 November 2011

சர்வாதிகாரிகளின் எழுத்துக்கள் வறண்ட உரைநடை, அபாயகரமான அரசியல்


சச்சிதானந்தன் சுகிர்தராஜா
கிரேக்கத் தத்துவ ஞானி பிளேட்டோ கனவு கண்ட அந்த லட்சியக் குடியரசில் அவர் கவிஞர்களுக்கு இடம் தரவில்லை. ஆனால் நிஜக் குடியரசுகளை நிறுவிய சர்வாதிகாரிகள் தங்களைக் கவிஞர்களாகவும் கதாசிரியர்களாகவும் ஆக்கிக்கொள்ள முயன்றிருக்கிறார்கள். அல்பேனியாவின் Enver Hoxha முதல் ருஷ்யாவின் Vladimir Lenin வரை இலக்கியம் படைத்திருக்கிறார்கள். இந்தச் சர்வாதிகாரிகளில் மிகப் பெரிய இலக்கியச் சாதனை புரிந்தவர் வடகொரியாவின் Kim Jong II. கடைசிக் கணக்குப் படி இவர் 1,500 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். இவர் கைவைக்காத விஷயங்களே இல்லை. Opera பற்றியும் இவர் எழுதியிருக்கிறார்.
‘காதல் இலக்கியம்’, ‘புனைவியல்வாத இலக்கியம்’, ‘கொலை இலக்கியம்’, ‘பெண்னிய இலக்கியம்’ போல் இப்போது சர்வாதிகாரிகளின் இலக்கியம் என்ற ஒரு வகை உருவாகிவருகிறது. சர்வாதிகாரிகளின் வாட்கள் மட்டுமல்ல பேனாக்களும் பேசும்போல் தெரிகிறது. இன்னொரு விதத்தில் சொல்லப்போனால் மக்களின் ரத்தத்தை மட்டுமல்ல அவர்களின் மையைக்கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. இந்தக் கட்டுரையில் இரண்டு சமகாலச் சர்வாதிகாரிகளின் படைப்புகளை அறிமுகப்படுத்துகிறேன். ஒருவர் ஈராக்கின் சதாம் ஹுசைன். மற்றவர் லிபியாவின் முன்னாமார் கடாஃபி. கலங்காதீர்கள். நீங்கள் வாசித்த இந்தப் பெயர்கள் சரியானவைதாம். நிதானமான நிலையில்தான் இதை எழுதியிருக்கிறேன்.
சதாம் ஹுசைனின் இலக்கிய உயில்
உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். சதாம் ஹுசைன் நான்கு நாவல்கள் எழுதியிருக்கிறார் - 1. Zabiba and the King, 2. The Fortified Castle, 3. Men and the City, 4. Begone, Demons. கடைசி நாவல் ஈராக்கை அமெரிக்கா தாக்கும் முன் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதன் பிரதியைச் சதாமின் மகள் ஒருவர் ரகசியமாகக் கடத்திச்சென்றதாக ஒரு செய்தி உண்டு. ஜப்பானியர்கள் இதை மொழிபெயர்த்திருக்கிறார்கள். இந்த நான்கில் ஒருவிதத்தில் மிக முக்கியமானது முதலில் குறிப்பிட்ட ஜபிபாவும் அரசனும் நாவல்தான். ஒருவேளை அவருடைய மறைவுக்குப் பின் வருங்காலத்தவர்களிடையே தன்னுடைய மரபுரிமையை நீட்டிக்க இந்த நாவலைச் சதாம் எழுதியிருக்கலாம். அவரது நாடு, அதன் எதிர்காலம் பற்றிய சதாமின் உள்மன எண்ணங்களையும் அவரது திட்டங்களில் மறைந்து கிடந்த அரசியல் நோக்கங்களையும் வெளிப்படுத்தும் பதிவேடாக இந்த நாவலை எடுத்துக்கொள்ளலாம். ஜபிபாவும் அரசனும் அவர் உயிருடன் இருந்த நாட்களில் இசைநாடகமாக Iraqi National Theaterஆல் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
ஜபிபாவும் அரசனும் 2000இல் வெளிவந்த கடுஞ்சூடான காதல் காவியம். முதல் அட்டையில் சதாமின் பெயர்கூடக் குறிப்பிடப்படாமல்தான் நாவல் வெளிவந்தது. இந்த அலுப்பான காதல் கதையில் நீங்கள் புதிதாக அறிந்துகொள்ள ஒன்றும் இல்லை. ஜபிபா என்ற வசீகரமான கிராமத்துப் பெண்ணும் அரப் என்னும் அரசனும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். ஜபிபாவின் முரட்டுக் கணவன் அவளைப் பாலியல் வல்லுறவுக்குட் படுத்துகிறான். அவனைப் பழிவாங்க நடக்கும் போரில் ஜபிபா காயப்பட்டு மடிந்துபோகிறாள். இறுதியில் அரசனும் இறந்த செய்தியுடன் கதை முடிவடைகிறது.
ஜபிபாவுக்கும் அரசனுக்குமிடையே நிகழும் காமப்புணர்ச்சியில்லாத ஆன்மநேயக் காதல் கதை இது. இந்த நாவலில் ஜபிபாவும் அரசனும் ஒரு காலகட்டத்தில் வந்த தமிழ்ப் படங்கள்போல் நிறையவே பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். வாழ்வு, மரணம், இயற்கை, இறையியல், ஆட்சிமுறை, அரசியலணைவு (political patronage) என்று விடாமல் கதைக்கிறார்கள். ஜபிபா கனமான விஷயங்களை அரசனுக்கு விளக்குகிறாள். முக்கியமாக நாட்டை எப்படி ஆள வேண்டும் என்றும் அரசனின் சந்ததிகளுக்கு ஆட்சியுரிமை பரம்பரைச் சொத்தல்ல என்றும் ஜபிபா சொல்லிக் கொடுக்கிறாள். இஸ்லாமிய மதத்தை அரசனுக்கு இவள்தான் அறிமுகப்படுத்துகிறாள்.
ஒரு தளத்தில் இது மெல்லிய காதல் கதைபோல் தெரிகிறது. இன்னொரு தளத்தில் ஈராக்கின் ஆட்சியாளருக்கும் ஆளப்படுகிறவருக்குமுள்ள உறவின் உருவகமாகவும் எடுத்துக்கொள்ளலாம். நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் அரசியல் மறைக்குறிப்புகள் கசிந்து வழிகின்றன. ஜபிபா = ஈராக்; அரசன்= சதாம்; ஜபிபாவின் கணவன் = அமெரிக்கா. கதை சொல்லியும் கதையில் வரும் அரசனும் பிறந்த இடம் தீக்ரீட். இந்தக் கிராமத்தின் சரித்திர முக்கியத்துவத்தை நினைவுபடுத்த வேண்டியதில்லை. சதாமின் பூர்வீகத்தை அறியாதவர்களுக்கு மாத்திரம்: தீக்ரீட் சதாம் பிறந்த ஊர். சதாம் கையாளும் உத்தியில் அராபிய இரவுகளின் இலக்கியச் சாடை தெரிகிறது. Scheherazade ஆயிரத்தோரு இரவுகளில் அரசனுக்குக் கதை சொல்வாள். சதாமின் நாவலில் பெயர்சொல்லப்படாத கிராமத்துப் பாட்டி கதை சொல்வதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ‘பல ஆண்டுகளுக்கு முன்பு பெருஞ்செல்வாக்குடைய அரசன் ஒருவன் இருந்தான். அவனுடைய பெயரும் செல்வாக்கும் அகிலம் எல்லாம் பரவியிருந்தன. அவனுடைய பிரஜைகளிடையே மரியாதையையும் அவனுடைய எதிரிகளிடையே பயத்தையும் அவன் ஏற்படுத்தியிருந்தான்’ என்று நாட்டார்மரபுக் கதைபோல் ஆரம்பிக்கிறது. நாவலின் தொடக்கத்தில் வரும் இந்தப் பாட்டி ஒருவிதமான விளக்கமுமில்லாமல் மறைந்துவிடுகிறார். மறுபடியும் சம்பந்தமில்லாமல் நாவலின் ஒரு கட்டத்தில் நுழைகிறார். ஆகையால் பாட்டியை மறந்துவிட்டு ஜபிபாவுக்கும் அரசனுக்குமிடையே நடக்கும் உரையாடலைக் கவனியுங்கள். ஈராக்கில் நிகழும் கதையின் காலம் இஸ்லாம் பரவும் முன் உள்ள கி.மு ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டு. ஆனால் எந்தவித எச்சரிக்கையும் இல்லாமல் கதை நிகழ்வுகள் திடீரென நவீன ஈராக்குக்குத் தாவுவதால் இந்தத் திருக்கு மறுக்கான கதைசொல்லல் உத்தி அசுர வேகத்தில் படிப்பவர்களுக்கும் அதிகம் துருவித் துருவிப் படிக்காத பழக்கமுள்ளவர்களுக்கும் கொஞ்சம் தடுமாற்றத்தைத் தரக் கூடும்.
உருவகங்களும் உருவகிப்புகளும் மலிந்துகிடக்கும் இந்த நாவலின் சுவையுச்சம் கதையின் முக்கியக் கட்டத்தில் ஜபிபா அவளுடைய பெயர் தரப்படாத கணவனால் மிருகத்தனமாகப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படும் வர்ணிப்பாகும். ஜபிபாவை ஈராக்காகவும் அவளுடைய கணவனை அமெரிக்காவாகவும் வாசியுங்கள். அப்போது சதாம் புலப்படுத்த விரும்பும் அரசியல் குறியீடு தெரியவரும். அத்துடன் இந்தச் சம்பவம் நடைபெற்ற தினம் ஜனவரி 17 என்று சதாம் சொல்வதையும் சேர்த்து வாசியுங்கள் இதில் உட்பொதிந்து கிடக்கும் உள்ளார்ந்த பிரதியின் பொருள் புரியும். நவீன ஈராக்கில் இந்த நாள் மிக முக்கியமானது. இதே திகதியில்தான் Operation Desert Storm ஆரம்பமாகி அமெரிக்கப் படைகள் பாக்தாத்தில் குண்டுகளை வீசின. இந்தப் போரைத்தான் ‘யுத்தங்களுக்கு எல்லாம் அன்னை’ என்று சதாம் வர்ணித்திருந்தார். ஜபிபாவின் கணவனுக்கெதிரான பழிவாங்கும் போரில் அவளும் கணவனும் இறந்து விடுகிறார்கள். இருவருமே பக்கத்துப் பக்கத்துக் கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகிறார்கள். ஜபிபா மக்களின் ரத்தச் சாட்சியாக அறிவிக்கப்படுகிறாள். ஜனவரி 17 அவளின் நினைவுதினமாகப் பிரகடனப் படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்ல வருடந்தோரும் அந்தத் தினத்தில் ஜபிபாவின் கல்லறையில் மலர் வளையங்கள் வைக்கவும் எல்லை மீறி வருகிறவர்களுக்கும் தேசத் துரோகிகளுக்கும் எச்சரிக்கையாக அவளின் சண்டாளக் கணவனின் பிணக்குழி மேல் கற்களைவீசி எறியவும் அரசன் உத்தரவிடுகிறான்.
அமெரிக்கர்கள், அரபு இளவரசர்கள் தவிர சதாமின் சினத்துக்குள்ளாகிறவர்கள் அவருடைய குடும்பச் சொந்தக்காரர்கள், முக்கியமாக ஆண் உறவினர்கள். இந்தக் கதையில் வரும் அரசனின் தகப்பனார் தன்னுடைய மகனையே கொடுமைப்படுத்துகிறார். இவர் சதாமின் மாற்றாந்தந்தை ஹாஜ் ஹாசான் இப்ராகிமை நினைவுபடுத்துகிறார். அதேபோல் நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கும் அரசனுக்கு எதிராகச் சதிசெய்யும் ஒருவழிச் சகோதரர்களையும் மாற்றாந்தாயின் மகன்களையும் நிஜ வாழ்க்கையில் இலகுவில் அடையாளம் கண்டுகொள்ளலாம். உடனடியாக நினைவுக்கு வருகிறவர் சதாமின் தூரத்து உறவினர் ஹுசைன் காமீல். இவர் 1995 ஜோர்டானுக்குத் தப்பி ஓடியது மட்டுமல்ல சதாமின் மரபொழுங்கு சாராத ஆயுதங்கள் பற்றி முதன்முதலில் தகவல் கொடுத்தவர். ஒரு கட்டத்தில் சதாமின் பின்னுரிமையாளராகக் கருதப்பட்டவர்.
ஒட்டிணைவில்லாமல் நகர்ந்துகொண்டிருக்கும் இந்தக் கதையில் மிக வறட்சியான பகுதி இந்த நாவலின் இறுதிப் பாகமாகும். இந்தப் பக்கங்கள் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டவைபோல் தோன்றுகின்றன. ஜாபிபாவின் மரணத்திற்குப் பின் ஈராக்கின் எதிர்காலம் பற்றியும் மிக முக்கியமாக மன்னராட்சி பற்றியும் விவாதம் நடை பெறுகிறது. ஈராக் மக்களிடையே முடியாட்சி பற்றி இருமனப்போக்கான எண்ணம் உண்டு. மேற்கத்திய சர்வாதிகாரிகள் ஹைஸிமையிட் (பிணீsலீமீனீவீtமீ) வம்சாவளி மன்னர்களை வலுக்கட்டாயமாக அவர்கள்மீது திணித்தது ஒரு காரணமாக இருக்கலாம். நாவலில் முழுக்க அரசர் ஆட்சி பற்றி ஒரு தெளிவான செய்தி இல்லை. சதாம்கூட மேற்காசிய வேந்தர்களுடன் அடிக்கடி மோதியிருக்கிறார். அரபு அரசர்களின் வாழ்க்கைப் பாணி, அவர்களின் அரண்மனைச் சூழ்ச்சிகள், நிலப் பிரபுத்துவ அரசியல், அவர்களின் அன்னிய மோகம் எல்லாம் நாவலில் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றன. ஆனால் சதாம் இந்த இயல்புகளுக்கெல்லாம் மீறிய ஆட்சியாளராக வர்ணிக்கப்பட்டிருக்கிறார். பழைய கீர்த்திவாய்ந்த பாபிலோன் மன்னர் நெபுகத்நேசரின் அந்தஸ்தில் சதாம் வைக்கப்பட்டிருக்கிறார். ‘சுதந்திரத்தை விரும்புவதாகச் சொல்லுகிறீர்கள், ஆனால் புதிய வெளிச்சத்தையும் காற்றையும் உள்ளே வரவிடாத கோட்டைகளைக் கட்டியிருக்கிறீர்களே?’ என்று ஜபிபா அரசனைக் கேட்பதற்கு அவன் சொல்லும் பதில்: ‘இவை ஆடம்பர மாளிகைகள் அல்ல. அரசின் உறுதியையும் ஆட்சியின் நிலைப்புத்தன்மையையும் மக்களுக்கு உணர்த்தும் கேந்திரங்கள்.’
தன் உறவினரிலிருந்து அமெரிக்கர்வரை எல்லாரையும் குறைகூறும் சதாம் தன்னுடைய ராணுவத்தை மட்டும் மெச்சுகிறார். ஈராக்கியப் படையினர் விசுவாசமுள்ளவர்களாகவும் நேர்மையாளர்களாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். நூலின் கடைசி வரி குறியீட்டுத்தன்மை கொண்டது. ‘ராணுவம் நீடுழி வாழ்க’ என்று சதாம் இந்த நாவலை முடிவுக்குக் கொண்டுவருகிறார். இந்த வசனம் அவர் தன் படையினர்மீது கொண்ட தன்னம்பிக்கையையும் சிநேகவாஞ்சையையும் தெரிவிக்கிறது. சதாமின் வாழ்நாளுக்குப் பின் யார் அவரைத் தொடர வேண்டும் என்று முடிவான கருத்தும் இந்த நாவலில் இல்லை. ஜபிபாகூட மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஆட்சியாளரை விரும்புகிறாள். ஆட்சிப் பரம்பரை உரிமை அல்ல. மன்னரின் மகன் என்ற காரணத்தினாலேயே ஒருவர் மன்னராக வரத் தகுதியானவரல்ல என்றும் கூறுகிறாள். இறுதியில் நடக்கும் மக்கள் அவை விவாதத்தில் ஐந்து வீரர்களை இழந்த அன்னையொருத்திச் சொல்லுகிறாள்: ‘எங்களையும் எங்களின் பிள்ளைகளையும் புத்தி சுவாதீன மில்லாத அரசரின் மகன்கள் ஆள விரும்பவில்லை’. இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சபையினர் மிகப் பலமாகச் சிரித்ததாகப் பிரதியில் காணப்படுகிறது. சதாமின் மகன்கள் உதேயும் குவேசியும் வாசிக்கும் பழக்கமுள்ளவர்களாக இருந்தால் இந்த நாவலில் வரும் இப்படியான வரிகள் அவர்களுக்கு மிகுந்த கவலையைத் தந்திருக்கும். அவர்களில் ஒருவரும் ஆட்சிக்கு வருவதற்கான அறிகுறிகள் பிரதியில் இல்லை.
இந்த நாவலின் முழுநோக்கமுமே சதாம் ஹுசைனை எல்லாக் குற்றங்களிலும் இருந்து விடுவித்து ஒரு நன்மகனாக ஈராக் மக்களுக்கும் உலகுக்கும் காட்டுவதே. சமூக மக்களாட்சிவாதியாகச் சதாம் உருமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அடக்கு முறை ஆட்சியில் மக்களுக்குக் கிடைக்கும் அரசியல் ஆதாயங்கள் பற்றி இந்த நாவல் நிறையப் பேசுகிறது. அந்த நாட்டுமக்களுக்கு நடந்த ஆக்கினைகள், அட்டூழியங்களுக்கு முழுக்காரணம் சதாமின் ஆட்சிக் கொள்கைகள் அல்ல மற்றவர்களே. அன்னியர்கள் மிக முக்கியமாக அமெரிக்கர்கள், யூதர்கள், மேற்கு நாட்டு அரசியல் தேவைகளுக்கு அடிபணியும் அக்கம் பக்கத்து அராபிய அரசுகள், தீங்கு விளைவிக்க விரும்பும் சொந்தக்காரர்கள் என்று இப்படி ஒரு கும்பலையே நாவல் பட்டியலிடுகிறது. சதாமின் மரணத்திற்குப் பின் படித்தபோது இந்த நாவலில் வரும் ஒரு வசனம் என்னை உறுத்தியது. ஜபிபாவும் அவளுடைய கணவனும் இறந்த பின் நடக்கும் மக்களவைக் கூட்டத்தில் ஈராக்கின் எதிர்காலம் பற்றிப் பேசும்போது ஒரு கதாபாத்திரம் கேட்கிறது: ‘ஒரு அரசனை விலக்கிவிட்டு இன்னொரு அரசனைத் தலையில் சுமப்பதற்காகவா இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம்.’
ஒருவிதத்தில் இந்த நாவலைச் சதாமின் இறுதி விருப்பாவணமாகவும் (testament) எடுத்துக்கொள்ளலாம். சதாம் ஹுசைனுக்கு அவருக்குப் பிறகு விட்டுச்செல்ல இருக்கும் மரபுடைமை எச்சம் உறுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஏனெனில் நாவலில் வரும் அரசன் ஏக்கத்துடன் ஜபிபாவிடம் கேட்கிறான் ‘நான் மரித்த பின்பு என்னை மக்கள் அவர்களுடைய தோள்களில் கொண்டுசெல்வார்களா?’ அதற்கு ஜபிபா கொடுத்த உறுதிமொழி: ‘ஆம், பிரபு. மக்கள் உங்களைத் தோள்களில் கொண்டுசொல்வார்கள். அது மட்டுமல்ல அவர்கள் இதயத்தில் உங்களுக்கு என்றுமே இடம் இருக்கும்.’ ஆனால் இது நடைமுறையில் சாத்தியமாகவில்லை. கனவுக்கும் கற்பனைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனித்துப் பாருங்கள். இந்த நாவல் சதாம் ஹுசைனின் வாழ்விறுதி விருப்பம், கல்லறை வாசகம், வாழ்க்கைச் சுருக்கம் எல்லாம் ஒன்று திரண்ட கலப்பின வகை என்று வைத்துக்கொள்ளுங்கள்.
சதாமின் இலக்கிய ஆர்வம் அவருடைய ஆட்சி நாட்களுடன் மட்டும் முடியடையவில்லை. அமெரிக்கரின் கைதியாகப் பாக்தாத் சிறையில் இருந்தபோது கவிதைகள் எழுதியிருக்கிறார். இதுவே அவர் எழுதிய கடைசி வரிகளாக இருக்கலாம். சதாமின் இந்தக் கவிதை உப்புச்சப்பில்லாத உளறல்போல் இருக்கிறதே என்று உங்களுக்குத் தென்படலாம். இதற்கு என்னுடைய சுதந்தர மொழிபெயர்ப்பு காரணமல்ல. அவர் அராபிய மொழியில் படைத்ததை ஆங்கிலம் வழியாகப் படித்துத் தமிழில் தந்ததில் சதாமின் கவிதை அழகியல் ஒன்றும் சிதைந்து போய்விடவில்லை. மூலமே படுமந்தம். நான்தான் கொஞ்சம் சீர்படுத்தி வாசிப்புத்தன்மையை உண்டாக்கியிருக்கிறேன்:
‘மக்களே நாங்கள் உங்களைக் கைவிட்டதில்லை//எந்தப் பேரழிவிலும் கட்சியே தலைமை தாங்கும் //உங்களுக்கும் எங்கள் தேசத்திற்கும் என் ஆன்மாவை அர்ப்பணித்தேன்// இந்தக் கடுமையான நாட்களில் ரத்தம் மிக மலிவானது//தாக்கப்படும்போது நாங்கள் மண்டியிடுவ துமில்லை, வளைந்துகொடுப்பதுமில்லை//எதிரிகளைக் கவுரவத்துடன் மதிப்போம்.’
கடாஃபியின் கடபுடா எழுத்தாண்மை
லிபியாவின் முன்னாமார் காடஃபி எழுத்துக்குப் புதியவரல்ல. எழுபதுகளில் ஒரு குறிப்பிட்ட கருத்துகோள்கொண்ட மத்தியத் தர வாலிபர்களின் சுட்டு விரல்களால் அதிகப் பக்கங்கள் புரட்டப்பட்ட இரு அடக்கமான கைநூல்கள் பிரபலமாயிருந்தன. ஒன்று சீனாவின் மாவோ ஏழுதிய Red Book. மற்றது லிபியாவின் முன்னமார் காடஃபி எழுதிய Green Book. இந்த நூல் லிபியர்கள் கட்டாயம் வாசிக்கும் படியான பிரதியாக இருந்தது. சில ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நூலைப் பற்றிய வாராந்தர வகுப்புகள் நடத்தப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன். கட்சிகள் அற்ற மக்களால் நேரடியாக நடத்தப்படும் லிபியாவின் தனிரகப் பொதுவுடமையான jamahiriya பற்றிப் பேசும் நூல். இதைவிடக் காடஃபி Escape to Hell and Other Stories என்னும் சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கிறார். இலக்கிய அமைப்புருவில் எந்தப் படைப்பு வகையைச் சார்ந்தது என்று சொல்ல முடியாத குழப்பமான தொகுப்பு இது. இவை கதைகளா? கட்டுரைகளா? புலம்பல்களா? போதனைகளா? பிராத்தனைகளா? சும்மா போய்க்கொண்டிருக்கும் கதையில் திடுமெனப் பட்டப்படிப்பு வியாசம் போல் அவருடைய அரசியல் கருத்துகோளை இடையில் புகுத்திவிடுவார். தரம் பிரித்துச் சொல்ல முடியாத பின் நவீனப் பிதற்றல் என்று இக்கதைகளை ஒதுக்க முடியாது. இவர் எழுத்துக்களில் கையாளப்படும் கருப்பொருட்கள் முக்கியமானவை. ஆனால் அவர் அவற்றைச் சொல்லிய விதத்தில்தான் குழப்பமும் தடுமாற்றமும் தெரிகின்றன. ஒருவேளை நல்ல எடிட்டர் கிடைத்திருந்தால் கடாஃபி என்ற தரமான இலக்கிய வித்தகர் உருவாகியிருக்க முடியும்.
நவீனத்தின் அருட்பேறுகளான விஞ்ஞானம், நகர்ப்புறம், மருத்துவம், விண்வெளிப் பயணங்கள் கடாஃபியின் கதைகளில் வெறிசார்ந்த பார்வையுடன் பிய்த்துத்தள்ளப்படுகின்றன. விண்வெளி வீரரரின் தற்கொலை என்னும் கதை வான வெளியில் அதிக நாட்கள் கழித்த ஒருவர் பூமிக்குத் திரும்பி வேலை தேடுகிறார். அதீத விஞ்ஞான அறிவுள்ள அவரால் சாதாரண தச்சு அல்லது விவசாயத் தொழில்செய்ய முடியவில்லை. அதுமட்டுமல்ல அவரது மொழிநடைகூட அறிவுபூர்வமானது. ஆகையால் அவர் பேசுவது ஒருவருக்குமே புரியவில்லை. வாழ்க்கையை மீண்டும் தொடர முடியாமல் அவர் தற்கொலை செய்துகொள்கிறார். கோள் கிரக ஆராய்ச்சி அன்றாடக் காரியங்களுக்கு உதவாதது என்பது தான் இக்கதையின் செய்தி. அது போல் வெளிநாட்டு மருந்துகளைக் கண்டித்து உள்நாட்டு மூலிகை வைத்தியத்தின் மகத்துவம் பற்றிய கதையும் உண்டு. நூதனமான கதைகளில் ஒன்று முதலாம் வளைகுடாப் போரில் அமெரிக்கத் தளபதியாக இருந்த கிறிஸ்தவரான Gen. Norman Schwarzkopf இஸ்லாமியரின் முக்கியமான ரம்சான் நோன்பு எப்போது தொடங்கிறது என்ற நாளை நிச்சயிப்பது பற்றியது. சில வேடிக்கையான சரித்திரச் செய்திகளும் கடாஃபியின் கதைகளில் உண்டு. அவற்றில் ஒன்று அமெரிக்காவைக் கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல அராபிய இளவரசர் ஒருவர்.
இந்தத் திருக்குமறுக்கான கடாஃபியின் எழுத்துகளில் அதிகம் கவனம்பெறுவது நகரவாழ்வின் பதனழிவு. நகரம், கிராமம், பூமி போன்ற கதைகளில் கிராமத்துக்குத் திரும்ப வேண்டும் என்ற ஏக்கம் தெரிகிறது. பெருநகர வாழ்க்கை தரும் உலைவுகள், உளவழுத்தங்கள் பற்றி வர்ணிக்கும்போது கடாஃபி என்ற ஆத்திரக்காரரைப் பார்க்க முடிகிறது. இந்தக் கதைகளில் இரண்டு காரியங்கள் எனக்குப் பிடித்திருந்தன. ஒன்று எஃகுத் தொழிற்சாலை, நீர்த் தேக்கங்கள், தெருக்கள் அகலப்படுத்துதலுக்குச் செலவளிக்கும் பணத்தை அராபிய விஞ்ஞானம், இறையியல், வரலாற்றைப் பதிவுசெய்யும் பழைய, அபூர்வ நூல்களையும் பிரதிகளையும் சேர்ப்பதற்கு உபயோகிக்க வேண்டும் என்பது.
மற்றது நகரத்துக்குள் தப்பித்தல் என்னும் கதையில் பொதிந்துகிடக்கும் தீர்க்கதரிசனம். கிராமத்திலிருந்து வரும் ஒருவன் திரண்டுவரும் ஒரு நகர மக்கள் கூட்டத்துக்குள் மாட்டிக்கொள்கிறான். மக்கள் கும்பலாகச் செயல்படும்போது நடக்கும் விளைவுகளை இது விவரிக்கிறது. அதில் வரும் ஒரு வசனம் லிபியாவின் சமகால நடப்பை அப்படியே பிரதிபலிக்கிறது: ‘கொடுமையிலும் மிகப் பெரிய கொடுமை மக்கள் திரளாக வெளிப்படுத்தும் கொடுங்கோன்மை. கும்பலின் அடக்குமுறையைத் தனி மனிதனால் சமாளிக்க முடியாது’. இந்த வாக்கியங்களை எழுதியபோது ஒரு நாள் தனது ஆட்சிக்கும் தனக்கும் எதிராக மக்கள் கலகம்புரிவார்கள் என்று கடாஃபி நினைத்தே இருக்கமாட்டார். அது மட்டுமல்ல மக்களிடையே புகழ்பெற்ற தலைவர்களான Hannibal, Savonarola, Robespierre, Mussolini, Nixon போன்றவர்களுக்கு என்ன நடந்தது என்றும் இந்தக் கதை நினைவுகூர்கிறது. ஹானி பாலுக்கு நஞ்சு கொடுக்கப்பட்டது. முசோலினி மக்களால் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார். சதாமின் பெயர் விடுபட்டிருக்கிறது. இந்தக் கதையைக் கடாஃபி சதாம் தொங்கவிடப்படும் முன் எழுதியிருந்தார்.
கடவுளுக்கும் கதாசிரியர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவருக்குமே முதலும் முடிவும் தெரியும். நான் இது எழுதிக்கொண்டிருக்கும்போது எந்தக் கொந்தளிக்குங் கூட்டத்தால் ஆட்சியாளர்களுக்குக் கெடு விளையும் என்று கடாஃபி எச்சரித்தாரோ அதே கலகக்கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்தி வந்தது. அதைக் கேட்டதும் அவர் எழுதிய ‘மரணம்’ கதையை மீண்டும் படித்தேன். இது இறப்பு பற்றி அவருகே உரிய வினோதமான தியானம். அதில் வரும் ஒரு வரி: ‘மரணத்துக்கு எதிரான சரியான நடவடிக்கை அதை நேருக்கு நேர் எதிர்கொள்வதுதான். அன்னிய நாடுகளுக்கு மறைந்தோடுவதால் மரணத்திலிருந்து தப்பிக்க முடியாது.’ அவர் சொன்னபடி சொந்த ஊரிலேயே அவரின் முடிவு நேர்ந்திருக்கிறது.
சதாம், கடாஃபியின் எழுத்துக்களை ஒன்று சேர வாசிக்கும்போது சில இணைவுகளையும் வேறுபாடுகளையும் காணலாம். இருவருக்கும் இணக்கமான அமெரிக்க வெறுப்பு உண்டு. இருவருமே அயல் அரபு நாடுகளின் அமெரிக்க வசியம் பற்றி ஏளனப் பார்வை உண்டு. கடாஃபியின் புதிய நிலாவைப் பார்க்கும்போது நோன்பை நிறுத்துங்கள் என்னும் கதை குவைத் தாக்குதலில் சவுதி அராபியா அமெரிக்கர் பக்கம் சாய்ந்ததைக் கடுமையாக விமர்சிக்கிறது. உலகின் எந்தப் பிரச்சினைக்குப் பின்னாலும் சீயோன்வாதிகளே காரணமாக இருக்கிறார்கள் என்று இருவரும் நம்புகிறார்கள். இவர்களுடைய ஆக்கங்களில் இஸ்லாத்தைப் பற்றி ஒரு தளர்ந்த பார்வை உண்டு. மற்றபடி எழுத்தாளுமையை மட்டும் வைத்துப் பார்த்தால் கடாஃபிக்கு முன்னால் சதாம் ஜானகிராமன் போல் தெரிகிறார். சதாம் தன்னைப் பொதுமக்கள் சார்ந்த குடியிறைமையாளராகப் பிரகடனப்படுத்திக்கொள்ள முயன்றால் கடாஃபி அவரைக் கூடாரமடித்து வாழும் அப்பாவியான அராபிய நாடோடியாக அடையாளப்படுத்துகிறார். சதாமின் அரசியல் நிலப் பரப்பு மிகக் குறுகியது. அவருடைய கவலை எல்லாம் அவருடைய நேசத்துக்குரிய ஈராக்தான். கடாஃபி பரந்த அராபிய தேசியத்தை ஆதரிக்கிறார். எகிப்திய நாசாரின் எண்ணங்கள் கடாஃபியின் எழுத்துக்களில் புதைந்துகிடக்கின்றன. அவருடைய இரண்டு சிறுகதை களான பிரார்த்தனையில்லாத வெள்ளிக்கிழமை, கடைசி வெள்ளிக் கிழமையில் நடந்த பிராத்தனை இரண்டிலும் அரபு நாடுகளிடையே காணப்படும் உட் பிளவுகள், பிரிவுகள் பற்றிய கவலைகள் தெரிகின்றன.
சதாமின் நாவலில் வரும் ஜபிபா முஸ்லிமாக இருந்தாலும் அவள் விவரிக்கும் ஆட்சிமுறைமைக்கு திருக்குரானிலிருந்து மேற்கோள்கள் காட்டவில்லை. ஒருவேளை இஸ்லாம் அராபியாவில் முழுவளர்ச்சி எய்யாதது காரணமாயிருக்கலாம். கடாஃபியின் சிறுகதைகளில் திருக்குரானிலிருந்து நேரடியாக அல்லது மறைமுகமான வசனங்கள் நிறைய உண்டு. கடாஃபி திருக் குரானை அவருடைய இரண்டு தேவைகளுக்காகக் கையாளுகிறார். இவர் மதச் சார்பற்றவர் என்ற கருத்தை மாற்றி இவருடைய இஸ்லாமியத் தோழமையை நிரூபிப்பதற்கு. மற்றது இஸ்லாமிய மத மரபுவாதிகளுக்கு எதிரான கேலித் தாக்குதலுக்காக. அதுமட்டுமல்ல ஏற்கனவே இஸ்லாமியச் சமூகத்தினரால் ஒப்புக்கொள்ளப்பட்ட இறை அறிஞர்களை எல்லாம் தன்னுடைய அரசியல் முன்னீடுகளை வலியுறுத்தக் கடாஃபி தன் எழுத்து உரையில் தக்க தருணங்களில் புகுத்தியிருக்கிறார்.
சர்வாதிகாரிகள் இலக்கிய வேலையில் ஈடுபடுவதற்கு இரண்டு காரணங்கள்தாம் உண்டு. ஒன்று கட்டுப்படுத்துதல். ஆட்களை மட்டுமல்ல ஆளப்படுகிறவர்களின் கற்பனையையும் அடக்கியாளுவது தான் இந்தச் சர்வாதிகாரிகள் எழுத்துக்களின் பிரதான நோக்கம். அவர்களின் ஆளுமைக்குக் கீழிருக்கும் மனிதர்களின் வெளிவாரிச் சுதந்திரங்களை மட்டுமல்லாமல் அவர்களின் உள்வாரி கலைப் புனைவுத் திறன்களையும் கட்டுக்குள் கொண்டுவருவதுதான் இவர்களின் முக்கிய இலக்கிய வேலையாக இருக்கிறது. ஒருவிதத்தில் அரசியலில் சாதித்ததை இலக்கியத்திற்கும் நீட்டிப்புச் செய்திருக்கிறார்கள். மற்றது இவர்கள் எப்போதும் ஏங்குவது இறப்பற்ற புகழ். அவர்கள் மடிந்த பின்பும் அவர்கள் படைத்த எழுத்துக்கள் அவர்களின் வாழ் நாளையும் மிஞ்சி மேலும் வாழும் என்ற மருட்சியான எண்ணம்தான் இவர்களைப் பேனாவைத் தூக்கவைக்கிறது. சற்று யோசிக்கையில் இந்த ஆசைகள் எந்த எழுத்தாளருக்கும் பொருந்தும்.
சர்வாதிகாரிகளின் இலக்கியத்தைப் படிக்கும்போது இன்னுமொரு கேள்வியும் இயல்பாகவே தோன்றுகிறது. விலங்கியல்புள்ள, முரட்டுத்தனமான தன்முனைப்பாட்சியர்கள் கிறுக்கித்தள்ளியதையெல்லாம் இலக்கியமாகச் சேர்த்துக்கொள்ள முடியுமா? இலக்கியம் படைப்பவர்களின் நன்னடத்தையை மட்டும் வைத்து இலக்கியத் தரம் மதிப்பிடக்கூடுமாயின் நாம் விரும்பி வாசிக்கிற எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையும் தொட முடியாது.
பிளேட்டோவின் கற்பனைக் குடியரசில் கவிஞர்களுக்கு இடம் இல்லை என்று இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருந்தேன். நடைமுறையில் நிஜமான குடியரசை உருவாக்கியவர் எழுதிய கவிதையை எடுத்துக்காட்டி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். சர்வாதிகாரிகளின் எழுத்தாண்மை சிறுகதை, நாவல்களுடன் நின்றுவிடவில்லை. கவிதையும் எழுதியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்றைக் கீழே பாருங்கள். தமிழில் மொழி பெயர்த்தால் கவிதையின் சாரம் கெட்டுவிடும் என்பதால் ஆங்கிலத்திலேயே தந்திருக்கிறேன். எழுதியவர் யார் என்பதை நீங்கள் படித்து முடித்த பின் சொல்லுகிறேன். உங்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது.
Open the door of the tavern and let us go there day and night,
For I am sick and tired of the mosque and seminary.
I have torn off the garb of asceticism and hypocrisy,
Putting on the cloak of the tavern-hunting shaykh and becoming aware.
The city preacher has so tormented me with his advice
That I have sought aid from the breath of the wine-drenched profligate.
Leave me alone to remember the idol-temple,
I who have been awakened by the hand of the tavern’s idol.
ஈரானில் உள்ள கூம் என்ற இஸ்லாமிய இறைக் கல்லூரியில் படித்த நாட்களில் எழுதப்பட்ட கவிதை இது. இந்த மரபுவழிக் கல்லூரியில் இசையும் ஓவியமும் ஊக்குவிக்கப்படவில்லை. பதிலாக மாணவர்கள் கவிதை எழுத உற்சாகப்படுத்தப்பட்டார்கள். அதன் விளைவுதான் இந்தக் கவிதை. இதில் பொதிந்துகிடக்கும் மதச்சார்பற்ற தன்மையை மறுபடியும் கவனியுங்கள். அத்துடன் கவிஞர், சாராய அருந்தகங்களுக்கு (taverns ) ஏங்குவதையும் பாருங்கள். இந்த வரிகளை எழுதியவர் சமீபத்திய பரிவில்லாத, தளர்வற்ற இஸ்லாம் உருவாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர். அவர் பெயர்: ஈரானின் மறைந்த மதத் தலைவர் அயத்துல்லா கொமேனி. நம்ப முடிகிறதா?

No comments:

Post a Comment

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா