
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஆ.திருமலை-பாஜெயந்தி ஆகியோரின் திருமணம் சோத்துபாக்கத்தில் நடைபெற்றது. இத்திருமணத்தை நடத்தி வைத்து ராமதாஸ் பேசினார்.அப்போது அவர், ‘’ஆண் கல்வி கற்றால் அவருக்கு மட்டுமே பயன்படும். பெண் கல்வி கற்றால் குடும்பம் முன்னேறும். வறுமையை ஒழிக்க கல்வி கற்று தரவேண்டும். ஆனால்,ஆட்சியாளர்கள் வறுமையை ஒழிப்பதாகக் கூறி இலவசங்களை வழங்கி வருகின்றனர். மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுங்கள் என்ற சீன பழமொழிக்கு ஏற்ப கல்வி கற்று தர வேண்டும்.
மக்களை குடிக்க வைத்து அதன் மூலம் வரும் வருவாயில் இலவச டி.வி,அரிசி,மிக்ஸி,கிரைண்டர்,ஆடு ஆகிய இலவசங்களை வழங்கி வருகின்றனர். இலவசங்களை ஒழிக்க வேண்டும்.
நாட்டை குடி இல்லாத நாடாக உருவாக்கவேண்டும் மற்றும் விவசாய நிலங்களில் வீட்டு மனைகளாக மாறியுள்ளன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதை பற்றி எல்லாம் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை.கொள்ளையடித்த பணத்தில் சிந்திய பணத்தை கொண்டு ஒட்டுக்கு ஆயிரம்,இரண்டாயிரம் கொடுத்து கோட்டை பிடித்து விடுகின்றனர்.
இந்த நிலை மாற வேண்டுமானால் திராவிட கட்சிகளை அப்புறபடுத்த வேண்டும்.அது பாமகவினால் தான் முடியும்’’ என்றார்.
பின்னர், ராமதாஸிடம்,அரசு உயர் ரக மதுபானங்கள் விற்கும் எலைட் ஷாப் என்ற பெயரில் கடைகள் அமைப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழ்நாட்டை குடிகார நாடு என்ற பெயர் மாற்றி அடைப்பு குறிக்குள் தமிழ்நாடு என்று போடலாம் என்றார்.


No comments:
Post a Comment