மசாஜ் சிகிச்சை என்ற பெயரில் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட பதினொரு இளம்பெண்களுக்கும் ஆறு மாதகால கடூழியச் சிறைத்தண்டனை விதிக் கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டியில் செல்லமுத்து அவனியு பகுதியிலேயே மேற்படி நிலையம் இயங்கி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நிலையத்திற்கு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிவில் உடையில் சென்றபோது, அங்கிருந்த பெண்ணொருவர் மசாஜ் சிகிச்சையா? பாலியல் தேவையா? எனக் கேட்டுள்ளார்.
இதனையடுத்தே மேற்படி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு அங்குள்ளோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீண்டகாலமாக இயங்கி வந்த இந்த நிலையத்தில் வாடிக்கையாளரிடம் விபசாரத் தொழிலுக்கு மூவாயிரம் ரூபா அறவிடப்பட்டதாகவும் பொலிஸார் இதன்போது தெரிவித்துள்ளனர். ___


No comments:
Post a Comment