அணு ஆயுதத்தை தாங்கிக் கொண்டு 750 கி. மீ. தூரம் சென்று தாக்கும் "சவுர்யா" அதிவேக ஏவுகணை ஒரிசாவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.இந்திய இராணுவத்துக்கு தேவையான ஏவுகணையை உள்நாட்டு தொழில் நுட்பத்தில் இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) ஊருவாக்கி வருகிறது. 750 கி. மீ. தூரம் வரை சென்று தரைப் பகுதியை தாக்கும் 'சவுர்யா' அணு ஏவுகணையை ஒரிசாவில் உள்ள சண்டிபூர் சோதனை தளத்தில் டி. ஆர். டி. ஓ. நேற்று முன்தினம் மாலை சோதனை செய்தது.
இது ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அதிக வேகத்தில் செல்லக் கூடியது. 40 அடி ஆழ குழி யிலிருந்து ஏவப்பட்ட சவுர்யா ஏவு கணை விண்ணில் சீறிப் பாய்ந்து 485 விநாடிகள் பயணம் செய்து இலக்கை துல்லியமாக தாக்கியது. இதை இராணுவ ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நூற்றுக்கணக்கானோர் பார்வையிட்டனர். சவுர்யா ஏவுகணை எளிதில் கையாளக்கூடிய நவீன ஏவுகணை. இதை எடுத்துச் செல்வது, உபயோகிப்பது, கிடங்கில் சேமித்து வைப்பது மிகவும் எளிதானது.


No comments:
Post a Comment