பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 100க்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்கள் சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ளனர்.பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 100க்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளுடன் குறித்த நபர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இது தொடர்பில் சுவிட்சர்லாந்து சட்ட மா அதிபர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
பிறவுன்பெர்க் மற்றும் சூரிச் ஆகிய நகரங்களில் புலி உறுப்பினர்கள் செறிந்திருப்பதாக எதிர் தமிழ்த் தரப்புக்கள் தகவல் வழங்கியுள்ளன.
இவர்களில் பலர் வேறு நாடுகளின் ஊடாக சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சுவிட்சர்லாந்துக்கான இலங்கைப் பிரதித் தூதுவர் ஜகத் டயஸிற்கு எதிராக அந்நாட்டு சட்ட மா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போர்க் குற்றச் செயல்களின் அடிப்படையில் ஜகத் டயஸிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக விசாரணை நடத்த முடியாது என சுவிஸ் சட்ட மா அதிபர் அறிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
விசாரணைகள் நடத்தப்பட மாட்டாது எனத் தெரிவித்து ஐந்து பக்க ஆவணமொன்றை சட்ட மா அதிபர், இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜகத் டயஸ் உயர் இராணுவப் பயிற்சி ஒன்றைத் தொடர்வதற்காக விரைவில் சீனா விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.


No comments:
Post a Comment