
தாய் மண்ணின் விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களுக்கும் நாட்டுப் பற்றாளர்களுக்கும் மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து மாவீரன் லெப்.கேணல் சிவனேசன் (செல்லத்துரை புருசோத்மன்) அவர்களின் சகோதரன் ஜெகன் அவர்கள் ஈகச்சுடரை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னால் நாடளுமன்ற உறுப்பினர் திரு.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தியாக தீபம் லெப்.கேணல், திலீபன் கேணல் சங்கர், கேணல் இராஜூ அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தார். தொடர்ந்து திரு.செல்வராசா அவர்கள் தோழர் செங்கொடியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தார். தியாகிகளுக்கு திரு.ஆறுமுகம் அவர்கள் மலர் அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைக்க அவரைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் மாவீரர்களுக்கு தம் அஞ்சலியைச் செலுத்தினாhர்கள்.
தொடர்ந்து தியாக தீபம் திலீபனின் நினைவுப் பதிவுகள் கானொளியில் காண்பிக்கப்பட்டது. திரு. செல்வராசாவினது உரையினதை; தொடர்ந்து துன்பமேற்றலும் துயரத்தை சதித்தலுமே விடுதலையின் விலை என உணர்ந்தவர்களாய் தியாக தீபம் திலீபனினின், கேணல் சங்கர், கேணல் இராஜூ, ஈகைப்பேரொளி செங்கொடி அவர்களை நினைவில நிறுத்திக் கவிதை வடித்து தம் உள உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்கள் இன உணர்வாளர்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் உறுப்பினரான திரு.ஜெயானந்தமூர்த்தி அவர்களின் சிறப்புரையுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரக மந்திரத்தை அனைவரும் ஓங்கி ஒலித்து உணர்வு பூர்வமாக நிகழ்வு நிறைவடைந்தது.





No comments:
Post a Comment