
சித்தங்கேணி நாககன்னிகை அம்மன் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள வீட்டிற்குள் நள்ளிரவு வேளை உட்புகுந்த திருடர்கள் அங்கு உறங்கிக்கொண்டிருந்த மகனையும் தாயையும் வாளால் வெட்டிவிட்டு சுமார் இருபது பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த தாயும் மகனும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இராசலிங்கம் இராஜாராம் (வயது 28) என்பவரும்அவரது தாயாரான இராசலிங்கம் வள்ளியம்மை (வயது 55) என்பவர்களே வாள்வெட்டிற்கு இலக்கானவர்களாவர்.


No comments:
Post a Comment