விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாதுகாப்பிற்காக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் விசேட பாதுகாப்புப் படையினரைக் கொண்டு நேற்று முதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவற்றுறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அதற்கமைய 15 படையினரைக் கொண்ட விசேட அமைச்சுப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இவரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் இருந்து விடதலை பெற்ற பின்னர் தனக்கு நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் அடிப்படையில் தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து திருப்தி அடைய முடியாது எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இவர் சிறையில் இருந்து விடுதலை பெற்றதும் தனக்கு பாதுகாப்பு வேண்டுமானால் தானே பாதுகாப்பு அமைச்சிடம் அது குறித்து தெரியப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இவருடைய நன்னடத்தையினைக் கருத்திற் கொண்டே தற்போது இவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment