
இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி மழையால் நிறுத்தி வைக்கப்பட்டது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்பு பிரேமாதாச மைதானத்தில் நேற்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. மழையால் போட்டி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து களமிறங்கிய தொடக்க வீரர்களான மொகமது ஹபிஸ் ஓட்டங்கள் ஏதுமின்றியும், அசார் அலி 7 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய ஆசாத் ஷாபிக் 5 ஓட்டங்களும், மிஸ்பா உல் ஹக் ஓட்டங்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
மழை மீண்டும் பெய்ததால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.


No comments:
Post a Comment