
வட பகுதியிலிருந்து ரயில்மூலம் கொழும்பிற்கு பிரயாணம் மேற்கொள்ளும் தமிழர்களை அச்சுறுத்தி, பணத்தைக் கொள்ளையிட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.தாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்து, ரயிலில் வருகைதரும் நபர்களிடம் அடையாள அட்டைகளை சோதனையிடும் போர்வையில், சந்தேகநபர் பணத்தைக் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதுதொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ரயில்வே பாதுகாப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட நபர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


No comments:
Post a Comment