இஸ்ரேலிய இராஜதந்திரிகளை குறிவைத்து கார் குண்டொன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. குண்டை பொருத்தும் தருணம் அது வெடித்த காரணத்தால் மூன்று ஈரானியர்கள் கொல்லப்பட்டார்கள், ஒருவருடைய கால்கள் இரண்டும் அறுந்து வானில் பறந்தது. மேற்படி தகவலை தாய்லாந்து உளவுப்பிரிவு அறிவித்துள்ளது. சென்ற மாதம் ஈரான் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் ஈரானிய அணு குண்டு உருவாக்க தலைமை விஞ்ஞானி இஸ்ரேலிய மோஸாட் அமைப்பின் கார்க் குண்டு வெடிப்பில் உயிரிழந்ததாக ஈரான் குற்றம் சுமத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு வெளியால் ஈரானுடைய கரங்கள் விரிவுபட ஆரம்பித்துள்ளதா என்ற சந்தேகத்தை இன்று தாய்லாந்தில் இடம் பெற்ற சம்பவம் கோடி காட்டுகிறது.
இரு நாடுகளும் பாலஸ்தீனத்தை பலிக்கடாவாக்கி இதுவரை மறைமுகமான மோதல்களை நடாத்தி வந்தன. இப்போது பாலஸ்தீனத்தில் நிலமை அடிதலையாக மாறிவிட்ட காரணத்தால் இருவரும் நேருக்கு நேர் மோத ஆரம்பித்துள்ளமை தெரிகிறது. முதல் கட்டமாக கார்க் குண்டுகள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இதனுடைய ஆபத்தான அடுத்த கட்டம் எங்கே போகப்போகிறது இதுதான் இன்றுள்ள கேள்வி. பஞ்சும் – நெருப்பும் பக்கத்தில் வந்துவிட்டன, பற்றிக் கொள்ளாதே என்று கூறவா முடியும். அந்தோ கார்கள் வெடித்து வானத்தில் பறக்க காலும் கையும் ஆகாயத்தில் சுழன்று கிளம்புகின்றன. மேலும் உண்டு பல வேடிக்கைகள்.
நம்புங்கள் அணு குண்டு நாளை பிறக்கும் – நாட்டின்
அடிமை விலங்கு தெறிக்கும். –
ஈரானிய அதிபர் முகமடீனா நஜீட் சென்ற வாரம் கூறியது.


No comments:
Post a Comment