
மதவாச்சி – தம்மென்னாவ பகுதியில் பாடசாலை செல்லும் சிறுமி ஒருவர் தனது பாடசாலை கழுத்துப் பட்டியை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (15) மாலை 2 தொடக்கம் 3 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை சென்று வீடு திரும்பிய மாணவி இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். செவ்வந்தி சசனிக்கா எனப்படும் 15 வயதுடைய சிறுமியே தற்கொலை செய்து கொண்டவராவார். தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment