ஏவல் பேய் கூரையைப் பிடுங்கும் என்பது தமிழ் பழமொழி. தமிழில் சொல்லப்பட்ட ஏவல் பேய் போன்றதுதான் ஏவுகணை, இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவல் பேய் ஏவுகணைகளும் உண்டு. இதில் முக்கியமான பேய் ரஸ்யாவிடமுள்ள ஆர் – 29 என்னும் அணு குண்டு தலையில் பொருத்திய மோசமான ஏவுகணையாகும். இதை தமிழில் பிரமாஸ்திரம் என்று கூறலாம், பிரம்மாவுக்கு நான்கு தலைகள் உண்டு அதுபோல இதுவும்; நான்கு அணு குண்டுகள் பொருத்திய நான்கு தலைகளைக் கொண்டது.கடந்த டிசம்பர் மாதம் ரஸ்ய ஆழ்கடலில் வெடித்து சிதறிய ரஸ்யாவின் அணு நீர்ழுழ்க்கி கப்பலில் மொத்தம் 16 ஏவுகணைகள் இருந்தன. நான்கு தலைகளுடன் இருந்த ஏவுகணைகள் கடலடியில் வெடித்து சிதறியது தெரிந்ததே. இதனால் அணுக்கசிவு பாதிப்பு இல்லை என்று ரஸ்ய விஞ்ஞானிகள் உலகின் காதுகளில் பூச்சுற்றி பம்மாத்து பண்ணியிருந்தார்கள். நமது உள்ளுரில் பேயாட்டம் நடாத்தும் போலி மந்திரவாதிகள் போன்றவர்களே இந்த கூலிக்கு மாரடிக்கும் இராணுவ ஆய்வாளர்களாகும்.
இந்த முட்டாள்களின் பேச்சை நம்பி ஏமார்ந்த உலகத்திற்கு இப்போது உண்மை விளங்கியுள்ளது. அணு நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வெடித்த ஏவுகணைகளின் அணுக்கசிவு ரஸ்யாவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளதாக இன்று இரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏறத்தாழ அணு குண்டுகளை வீசியது போன்ற அபாயமான செயல் இதுவாகும். ஜப்பானில் புக்குசீமா ஏற்படுத்திய தாக்கம் போல இதுவும் பாரதூரமான தாக்கமாக அமையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
சோவியத் ரஸ்யா காலத்தில் கட்டப்பட்ட பத்தாம் பழைய ரஸ்ய நீர்மூழ்கிக் கப்பல்களும், அதனுடைய பழைய அணு ஆயுதங்களும் இப்போது ஆங்காங்கு வெடித்துச் சிதறி அதற்கே ஆபத்தாக வர ஆரம்பித்துள்ளன. ஏறத்தாழ ஏவல் பேய் கூரையை பிடுங்கியது போன்ற அபாயம் ரஸ்யாவை கணத்திற்குக் கணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் நன்கு உணர்ந்து கொண்ட தலைவரே புற்றின்.
ரஸ்ய கே.ஜி.பி உளவுப் பிரிவு தலைவரான இவருக்கே இந்த சீத்துவக் கேடுகள் அதிகம் தெரியும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ரஸ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, மக்களை பட்டினியில் போட்டு, அந்தப் பணத்தில் ரஸ்ய ஆயுதங்களை நவீனப்படுத்த திட்டமிட்டுள்ளார். அவர் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் ரஸ்ய தலைவிதி அதோகதியாகிவிடும். தவறின் ரஸ்யா மேலை நாடுகளால் ஒரு செத்துப் போன சிங்கம்போல பிய்த்து வீசப்படும் அபாயம் உள்ளது. அந்த நேரம் சீன ட்றாகன் ரஸ்ய பனிக்கரடியை கீறிக்கிழிக்கும்.


No comments:
Post a Comment