
உலகில் அதிக செலவு மிகுந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தியதில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உலகில் அதிக செலவு மிகுந்த நகரங்கள் எவை என்பது குறித்து சர்வதேச அளவில் 130 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் உணவு, ஆடைகள் வாங்குதல், வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு, கல்வி கட்டணம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு அதிக செலவு ஏற்படுவது தெரியவந்தது.
மேலும் ஆய்வு செய்தததில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகர் தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டு சூரிச் நகர் 5வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் 20 இடங்களில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த 5 நகரங்கள் இடம் பெற்றன. சிட்னி 7-வது இடமும், மெல்போர்ன் 8-வது இடமும் பெறுகிறது.
தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளில் கனடாவில் உள்ள வான்கூவர் நகரம் 37-வது இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சீனாவின் சாங்காய் ஆகியவை 42-வது இடத்தை பெற்றுள்ளன.
ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்திலும், சியோல் 9 இடம் உயர்ந்து 27-வது இடத்திலும் உள்ளன. இந்திய துணை கண்டத்தில் மிகவும் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை நகரங்களும், பாகிஸ்தானில் உள்ள கராச்சியும் இடம் பெற்றுள்ளன.


No comments:
Post a Comment