யாழ். போதனா வைத்தியசாலையில் அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுவது போன்றமாயத் தோற்றமொன்றை ஏற்;படுத்தியுள்ளசிங்களஅரசாங்கம் தொடர்ந்தும்இந்தவைத்தியசாலையைப் புறக்கணித்து வருகின்றது.தமிழர் தாயகப் பகுதியிலுள்ள முக்கியமான வைத்தியசாலையாகிய யாழ். போதனா வைத்தியசாலைக்குஉரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் பின்னடித்துவருவதாக யாழ். போதனா வைத்திய சாலையின் தாதிய உத்தியோகத்தர் நலன்புரிக் கூட்டுறவுச்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.1500 தாதியர்கள் பணியாற்ற வேண்டிய யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது 400தொடக்கம் 450 வரையான தாதியர்களே கடமையாற்றுகின்றனர்.தாதியர்கள் பணிசெய்யும் நேரம் 6 மணித்தியாலங்களாகும். ஆனால், தாதியர் பற்றாக்குறை காரணமாக தற்போதுபணியிலுள்ள தாதியர்கள் 18 தொடக்கம் 24 மணித்தியாலயங்கள் கூட கடமையாற்ற வேண்டிய கட்டாயதேவை ஏற்பட்டுள்ளதாகவும் தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.யாழ் போதனா வைத்தியசாலையிலுள்ள 30 விடுதிகள், 30 இற்கு மேற்பட்ட விசேட அலகுகள்,சத்திரசிகிச்சை கூடம் போன்றவற்றில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளர்களில் 10நோயாளர்களுக்கு ஒரு தாதி என்ற அடிப்படையில் பணியாற்ற வேண்டும்.தென்னிலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் இந்த அடிப்படையிலேயே வைத்திய சேவை இடம்பெறுகிறது.
ஆனால் யாழ். போதனா வைத்தியசாலையில் 25 தொடக்கம் 35 வரையான நோயாளர்களுக்கு ஒரு தாதி மட்டும் கடமையாற்ற வேண்டியேற்பட்டுள்ளது.இதே போன்றே யாழ்போதனா வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கும் பெரும் பற்றாக்குறைநிலவுகின்றது. குடாநாட்டிலுள்ள தமிழ் வைத்தியர்கள் தென்னிலங்கையிலும் வெளிநாடுகளிலும்பணியாற்றுவதற்கே ஆர்வம் காட்டுகின்றார்களென்று தொடர்ந்து கூறி வருகின்ற சிறீலங்கா அரசாங்கம் இதனாலேயே யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறைஉள்ளதென்றும் மாயத் தோற்றமொன்றை ஏற்படுத்தி வருகின்றது.இந்தக் கருத்து தமிழ் மக்கள் மத்தியில் எடுபடக்கூடும் என்பதால் வைத்தியர்கள் பற்றாக்குறைதொடர்பான கோரிக்கைகள் எழும் போதெல்லாம் சிறீலங்கா அரசாங்கமும் அதன் சுகாதாரத் துறைஅமைச்சும் இதனையே திரும்பத்திரும்பக் கூறி வருகின்றன.
ஆனால், உரிய பொறிமுறையொன்றை ஏற்படுத்தி யாழ். குடாநாட்டிலுள்ளதும் தமிழர்தாயகத்தில் சிறந்த போதனா வைத்தியசாலையுமான யாழ். போதனா வைத்தியசாலைக்கு உரியஆளணியினரைப் பெற்றுக்கொடுக்க அரசு தொடர்ந்து பின்னடிக்கிறது.தாதியர்களின் சாதாரண கடமை குறைந்தது 30 வருட காலமாக இடம்பெற்ற போரில் சிறீலங்கா அரசு படைகளால் யாழ். குடாநாடுமீது பொழியப்பட்ட குண்டு மழைகள், ஆட்லறித் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள்போன்றவற்றில் இறந்தவர்கள் போக காயமடைந்த அனைவரையும் யாழ். போதனா வத்தியசாலைகாப்பாற்றியது.
சிறீலங்கா அரசு குடாநாடு மீது விதித்திருந்த பொருளாதாரத் தடைகள், மருந்துப் பொருட்களுக்கானதடைகளுக்கு மத்தியிலும் தலை நிமிர்ந்து நின்று பணியாற்றிய இந்த வைத்தியசாலை போர்நிறைவடைந்த பின்னராவது அபிவிருத்தியாகுமென்றே தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர்.ஆனால் யாழ். போதனா வைத்தியசாலையில் அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுவது போன்றமாயத் தோற்றமொன்றை ஏற்;படுத்தியுள்ளசிங்களஅரசாங்கம் தொடர்ந்தும்இந்தவைத்தியசாலையைப் புறக்கணித்து வருகின்றது.


No comments:
Post a Comment