ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கையில் விடயமும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்காக, கனடாவில் இரண்டு நாள் 'அனைத்துலகத் தமிழர் மாநாடு' எதிர்வரும் 18 ,19ஆம் திகதிகளில் கனடியத் தமிழர்களால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.அம்மாநாடு தொடர்பான விபரம் பின்வருமாறு,ஐக்கிய நாடுகளின் சபையின் ஒரு அங்கமான மனித உரிமைக்கான அமைப்பானது 2006ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அந்த அவை 'ஐ.நா. மனித உரிமைகள் அவை'. அந்த அவையினை நடத்துபவர்கள் 47 நாடுகளின் பிரதிநிதிகளே.
அவர்களுடைய நோக்கம் ஐக்கிய நாடுகளில் இருக்கக்கூடிய 192 உறுப்புரிமை நாடுகளின் மனித உரிமை சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து, பரிந்துரையினை ஐக்கிய நாடுகள் சபைக்குச் சமர்ப்பிப்பதாகும். இந்த அமைப்பின் முக்கிய செயற்பாடு "Universal Periodic Review (UPR)".
நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு அங்கத்துவ நாடுகளைப் பற்றியும் இந்த அவை பரிசீலனைக்கு கொண்டுவரும். அதைப் பரிசீலனை செய்வதற்கு தேவையான தகவல்களைப் பிற நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் இந்தச் சபைக்கு அறிவிக்கும். இந்தப் பரிசீலனை அமர்வு ஜெனிவாவில் இருக்கக்கூடிய அவையில் நடைபெறும்.
இந்த அவையில் இருக்கக்கூடிய அங்கத்துவ நாடுகள் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படும். ஒரு அங்கத்துவ நாடு இரண்டு தடவைக்கு மேல் தொடர்ச்சியாக அங்கத்துவராக இருக்கமுடியாது.
இந்த ஆண்டில் இருக்கக்கூடிய அங்கத்துவ நாடுகள் 47. அதன் விபரம் கீழே தரப்படுகின்றன. நாடுகளின் உறுப்புரிமை முடிவடையும் கால எல்லையும் தரப்படுகின்றது.
AFRICAN STATES
Angola 2013
Benin 2014
Botswana 2014
Burkina Faso 2014
Cameroon 2012
Congo 2014
Djibouti 2012
Libya 2013
Mauritania 2013
Mauritius 2012
Nigeria 2012
Senegal 2012
Uganda 2013
ASIAN STATES
Bangladesh 2012
China 2012
India 2014
Indonesia 2014
Jordan 2012
Kuwait 2014
Kyrgyzstan 2012
Malaysia 2013
Maldives 2013
Philippines 2014
Qatar 2013
Saudi Arabia 2012
Thailand 2013
EASTERN EUROPEAN STATES
Czech Republic 2014
Hungary 2012
Poland 2013
Republic of Moldova 2013
Romania 2014
Russian Federation 2012
LATIN AMERICAN & CARIBBEAN STATES
Chile 2014
Costa Rica 2014
Cuba 2012
Ecuador 2013
Guatemala 2013
Mexico 2012
Peru 2014
Uruguay 2012
WESTERN EUROPE & OTHER STATES
Austria 2014
Belgium 2012
Italy 2014
Norway 2012
Spain 2013
Switzerland 2013
United States 2012
இந்த ஆண்டுக்கான 19வது மனித உரிமைக்கான அவையின் அமர்வு இந்த வருடம் பெப்ரவரி 27 இல் இருந்து மார்ச் 23 வரை ஜெனிவாவில் நடைபெற விருக்கின்றது.
அந்த அமர்வில் இலங்கை விடயமும் பரிசீலனைக்கு எடுக்கப்படுவதற்கு அதிகூடிய சந்தர்ப்பம் உள்ளது. இந்தப் பரிசீலனையில் பங்கெடுக்கப்போகும் அங்கத்துவ நாடுகளின் பட்டியலே மேல் தரப்பட்டவை. இந்த நாடுகளின் ஆதரவுகளை தமிழர்கள் பெற்றுகொண்டு தமக்கு நடந்த கொடுமைகளைத் தொடர்ந்து அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருதல் மிகமுக்கியமான செயற்பாடாகவிருக்க வேண்டும்.
இந்த நிகழ்வைக் கருத்தில் கொண்டு, கனடாவில் இரண்டு நாள் 'அனைத்துலகத் தமிழர் மாநாடு' கனடியத் தமிழர்களால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் முதல் நாள் மக்களையும், மனிதவுரிமைவாதிகளையும், வழக்கறிஞர்களையும், அரசியல்வாதிகளையும் உள்வாங்கி அவர்கள் அனைவரினதும் ஒப்புதலைப் பெற்று அதன் மூலம் ஒரு தீர்மானம் வெளியிடப்படும் (Declaration).
இம்மாநாட்டில் ஏற்படுகின்ற தீர்மானத்தைப் பல அரசியல் கட்சிகளுக்கும் மற்றும் ஒவ்வொரு நாடுகளின் செயற்பாட்டுக்கும் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்படும். இதன்மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இம்முறை ஜெனிவாவில் நடக்கவிருக்கும் இலங்கை விடயத்தில் உறுப்புரிமை நாடுகள் தமது மனச்சாட்சிக்கு ஏற்றவாறு பங்கெடுத்துக்கொள்ள வழிவிடுமென நம்பலாம்.
இந்த மாநாட்டில் நாம் எவ்வளவுக்கு அதிகமானோர் பங்கெடுத்துக்கொள்கிறோமோ அவ்வளவுக்கு அதிகமான பலனை நாம் எதிர்பார்க்க முடியும். இப்படியான மாநாட்டில் உருவாக்கப்படுகின்ற தீர்மானத்துக்கு வலுச்சேர்ப்பது மாநாட்டில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மக்களின் எண்ணிக்கையே என்பதுதான் உண்மை.
இந்த இரண்டு நாள் மாநாட்டின் இரண்டாவதுநாள் மாநாடாக உலகில் இருக்கக்கூடிய தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுத் தமிழ் அமைப்புக்களாக நாம் எவ்வாறு அடுத்தக்கட்டத்துக் நகரலாமென ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் வரும் உறுப்பினர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு பொதுச்செயற்பாட்டுக்கான ஒரு பாதை உருவாக்கப்படும்.
அவற்றைத் தீர்மானமாக எல்லா நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கும் அறிவிக்கப்படும். இதன் மூலம் நாம் சேர்ந்தியங்கும் முறையினை உருவாக்கி எம் வேலைகளைப் பகிர்ந்து கொண்டு நம் இலக்கை நோக்கிய நகர்வில் பயணிப்பதேயாகும்.
இம்மாநாட்டைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளக் கனடியத் தமிழர் தேசிய அவையோடு தொடர்பு கொள்ளவும். (416) 646-7624


No comments:
Post a Comment