
மனதில் கலைந்த போக முடியாத அலைகளாக கண்ணீர் நின்று நிரம்பி மோதும் நிமிடங்களுடன் நாங்கள் நித்தம் நித்தம் முட்டி மோதியே வாழ்க்கையின் இறிதிப்பாகத்தில் மன நோயின் பக்கத்தில் குடி கொண்ட பின்னும் முல்லைத்தீவில் நேற்றிரவு கடல்நீர் பெருக்கெடுத்து ஊர்மனைக்குள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றிரவு 9 மணியளவில் முல்லைத்தீவை அண்டிய கடற்கரை பிரதேசத்தில் இருந்து கரையை அண்டிய பகுதிகளுக்கு திபு திபுவென கடல் நீர் திடீரென உட்புகத்தொடங்கியது.
இதனால் ‘சுனாமி வந்துவிட்டது’ என மக்கள் அலறியடித்துக் கொண்டு கையில் அகப்பட்ட பொருள்களோடு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.
கடற்கரையோரமாக நிறுத்தப்பட்டிருந்த படகுகளும் இதன்போது உள்ளிழுத்து வரப்பட்டன.
ஏறக்குறைய முழங்கால் அளவுக்கு உயரமான கடல்நீர் ஊர்மனைக்குள் புகுந்திருந்தது.
செம்மலை, கள்ளப்பாடு,அளம்பில், முல்லைத்தீவு நகரை அண்டிய பகுதி, உடப்புக்குளம் என்பன இந்தக் கடற்பெருக்கின் போது பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.ஊர்மனைக்குள் புகுந்த கடல்நீர் இன்னமும் வற்றாமல் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இதன்போது உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை அங்கிருந்து வெளிப்படுத்தும் சகோதர செய்தி ஊடகம் உறுதிப்படுத்தியது.
ஆழிப்பேரலை ஏற்பட்டு ஏழு வருடங்கள் பூர்த்தியான நாளில் இது போன்று திடீரென கடற்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் தொடர்ந்தும் அச்சத்திலேயே தான் இருக்கின்றனர்.
அலை அடித்த பின்னும் அடி மனதில் பிரமையோ என்றோம் நரம் அறுந்த கனவும் கடல் கண்ணீர்கள் ஏன் எம் உடல் காவு கொள்கின்றதோ..?
உயிர் பிடி மான அடிமனதில் உப்பு நீர் கரை கடந்து போகும் உயிர் மடியில் நின்று உலாவுகின்றதே..?


No comments:
Post a Comment