
வாழ்வும் வசந்தமும் வாழ்த எங்கள் யாழ்பாண மாவட்டத்தில் 2011 தை மாதம் மாதம் முதல் வாரத்திலிருந்து மார்கழி 20ஆம் திகதி வரையில் 36 தற்கொலை மரணங்கள் நடைபெற்றுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மரண பதிவு மற்றும் மரணங்கள் தொடர்பான விசராணை அறிக்கையின் புள்ளிவிபரத் தரவுகள் குறிப்பிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்பாணத்தின் போதனா வைத்தியசாலையில் தற்கொலை மரணங்கள் தொடர்பான பதிவுகளின் படி 24 பெண்களும் 12 ஆண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்தப் புள்ளி விபரத் தரவு அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதில் குறிப்பிடும் அளவுக்கு வைத்திய சாலை வந்த தற்கொலைப்பதிவுகள் மட்டும் அடங்கும்.!
இதேவேளை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் தற்கொலை மரண அறிக்கையின் பிரகாரம் இளவயது குடும்பத்தினர் அதிகமாக இருப்பதாகவும்,
இவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை எதிர்நோக்கியதான அதாவது வாழ்வாதாரங்கள் மற்றும் குடும்பச்சண்டைகள் காதல்கள் என குடும்பப் பிணக்கு அல்லது மன அழுத்தம், தாங்க முடியாத அதிர்ச்சி, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மை, விரக்தி போன்ற காரணங்களாக இவர்களின் தற்கொலை அமைந்திருக்க வேண்டும் என தற்கொலைக்குப் பின்னரான மரண விசாரணை அறிக்கை குறிப்பிடுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி போர்க்குற்றத்தின் பக்கத்தில் சேர்மதியில்லாத பதிவுகளே ஆகும்.!


No comments:
Post a Comment